தமிழ் வளர்ச்சித் துறை தாய்மொழி குறித்த விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தாய்மொழி குறித்த விழிப்புணர்வு பேரணி ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணியில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல் கலந்து கொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கைகளில் பதாகைகளை ஏந்தியபடி ஏராளமான கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழ் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.