தமிழ் பல்கலைக்கழகத்தில் எந்த முறைகேடும் நடைபெற்றதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பேட்டி.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கூடல் – 2024 மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கோவி.செழியன் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் பெயர் இடம் பெற வேண்டும், அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் எழுதுவது குறித்து கவலையில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் வணிகர்களும் இதற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.
சோழர் அருங்காட்சியகம் மாதிரி வடிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரும் வடிவத்தை இறுதி செய்துள்ளார். அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒப்பந்தம் கோரி பணிகள் தொடங்கப்படும் என்றார்.
துணைவேந்தர் பணியிடை நீக்கும் செய்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு எந்த ஆதாரம் இதுவரை இல்லை. விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்து நான் கூறுவது தவறு. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு முடிவந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்..