in

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இதுவரை உரிய முறையில் கணக்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை,

பாதிக்கப்பட்ட பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை, அரசின் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் முழுமையாக கண்காணிக்கவில்லை,

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 26 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற முறையில் சிறப்பு மருத்துவர் பணியமர்த்த வேண்டும், குடவாசல் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளருக்கு ஆதரவாக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவிரி விவசாய அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….