in

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு 304 கோடி ஒதுக்கிய தமிழக முதலமைச்சர்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு 304 கோடி ஒதுக்கிய தமிழக முதலமைச்சர் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

விழுப்புரம் வழதாரெட்டி பகுதியில் ஏ கோவிந்தசாமி மணிமண்டபம் திறப்பின் போது திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.304 கோடி முதலமைச்சர் அறிவிப்பு தொடர்ந்து  செஞ்சி நான்கு முனை சந்திப்பில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர், நீர் ஆதார குழு சங்கம் மற்றும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீரனூர் அணைக்கட்டு பகுதிக்கு வந்தடைந்து   செஞ்சி அனந்தபுரம்  விக்கிரவாண்டி விழுப்புரம் பாண்டிச்சேரி திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஏரிகள் பயன்பெறும்.

இதன் மூலம் சுமார்  பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்பதால் இந்த திட்டத்தினை நிறைவேற்ற கோரி விவசாய அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஒவ்வொரு ஆட்சியிலும் இந்த திட்டத்தினை முன்னிறுத்தி தான் விக்கிரவாண்டி செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்களின் முதன்மை வாக்குறுதிகளாக இருந்த நிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதாரெட்டி பகுதியில் நடைபெற்ற முன்னாள் வேளாண்துறை அமைச்சர் ஏ கோவிந்தசாமி மணிமண்டபம் திறப்பின் போது விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சிகள் குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில் நந்தன் கால்வாய் திட்டம்  ரூ.304 கோடி மதிப்பீட்டில் அறிவிப்பினை வெளியிட்ட தனை தொடர்ந்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பாக செஞ்சி நான்கு முறை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடினர்.

What do you think?

சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்குச் சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

கலைஞரின் தாயார் நினைவிடத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் கலைஞரின் உறவினர்கள் மரியாதை செலுத்தினர்