in

டாக்டர் ராமதாஸ் பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

டாக்டர் ராமதாஸ் பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

 

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பற்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், தரையில் புரண்டு தர்ணா செய்த பாமக நிர்வாகி குண்டு கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர், 60 – பேர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் பற்றி, அவதூறாக பேசியதாக கண்டித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் செய்ய காவல் துறை அனுமதி தராத நிலையில் மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் – 60 க்கு மேற்ப்பட்ட பா.ம.க வினரை காவல் துறை கைது செய்தது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. முன்னால் மாவட்ட செயலாளர்கள் குத்தாலம் கணேசன், பாக்கம் சக்திவேல், சித்தமல்லி பழனிசாமி உட்பட பல்வேறு மாவட்ட, நகர ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது பாமக நிர்வாகி மதிவாணன் என்பவர் தரையில் புரண்டு படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அவரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை சீண்டிய இசைவாணியை கைது செய்ய வேண்டும்

முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் கைது