in

கொடைக்கானல் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த தமிழக முதல்வர்


Watch – YouTube Click

கொடைக்கானல் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த தமிழக முதல்வர்

 

கொடைக்கானல் கோல்ஃப் (golf) மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த தமிழக முதல்வர் திடீரென்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கொடைக்கானலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று கேட்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்…

தரைத்தலங்களில் சத்தத்தை தாண்டி அடித்து வரும் வெயிலின் தாக்கம் தாளாமல் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் தலைவர்களும் கொடைக்கானலில் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொடைக்கானலுக்கு ஐந்து நாள் பயணமாக ஓய்வுக்காக வந்த தமிழக முதல்வர் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று முழுவதும் ஓய்வில் இருந்த அவர் மாலை கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டும் கோல்ஃப் விளையாடியும் மகிழ்ந்தார்.

தமிழக முதல்வரின் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு தமிழ்நாடு முதலமைச்சர் விளையாடி மகிழ்ந்தார்.

மேலும் கோல்ஃப் மைதானத்திற்கு வெளியே பேட்டரி கார் மூலம் வந்த முதல்வர் திடீரென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சந்திக்க வேண்டும் என்று கூறி அவர்கள் காத்திருந்த இடத்திற்கு வந்து பயணிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார் . மேலும் கொடைக்கானலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா ஏதேனும் தீர்க்கப்பட வேண்டுமா என்றும் மூதாட்டி இடம் நலம் விசாரித்து சென்றார்.


Watch – YouTube Click

What do you think?

திரைப்பட படபிடிப்பில் முறையான ஊதியம் வழங்கபடவில்லையா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பழனியில் நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து முற்றுகையிட்ட அதிமுக பிரமுகர்கள்