கும்பகோணம் அருகே ஆடுதுறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 புதிய வகுப்பறையை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 வரை 183 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று அரசு தலைமை கொறடாவுமான சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், ரூபாய் 43 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது..
இந்த புதிய வகுப்பறையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து திமுக மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகமது, பேரூராட்சி செயலாளர் கோசி இளங்கோவன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி பேரூராட்சி தலைவர் ம க ஸ்டாலின், பேரூராட்சி துணைத்தலைவர் கமலா சேகர், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
இதில் பேரூராட்சி உறுப்பினர் மீனாட்சி முனுசாமி, பெற்றோர் ஆசியக் கழக தலைவர் ராமலிங்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்மணி, உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் வெற்றி திருநாவுக்கரசு, உதவி தலைமையாசிரியர் கண்ணதாசன், சுவாமிநாதன், ஒப்பந்தக்காரர் ஏபி பில்டர்ஸ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.