நெல்லை தாமிரபரணி நதியை பாதுகாக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் பொது கணக்கு குழு மூலம் வலியுறுத்தப்படும்.
சாதி ரீதியான பிரச்சனைகளை கலைந்து வேலைவாய்ப்பை உருவாக்க முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கனவு திட்டமாக கொண்டுவரப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆறு மாதத்திற்கு செயல்பாட்டிற்கு வரும் என நெல்லையில் பொது கணக்கு குழு தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தலைமையிலான குழு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தியது. இந்த குழுவின் உறுப்பினர்களான போரூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர் நாங்குநேரி பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் நெல்லை சந்திப்பு பகுதியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் வ உ சி படித்த பள்ளிக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள், தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கணக்கு விவகாரம் தொடர்பாகவும் கேட்டறிந்தனர். பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 13 துறைகள் சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறை குறித்தும், தேவையான பரிந்துரைகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது . தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை நாங்குநேரி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவு திட்டமாக கொண்டுவரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது தொழில்துறை செயலாளரிடம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது அங்கு இருக்கும் பிரச்சனைகள் ஆறு மாத காலங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என துணை செயலாளர் தெரிவித்துள்ளார் முன்னாள் நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் பரிந்துரையின்படி சாதிய ரீதியான பிரச்சனைகளை களைந்து வேலை வாய்ப்பு அமைக்கவே சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாஅமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் தவறுகள் நடந்துள்ளது. ஆறு மாத காலத்திற்குள் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் வேலைவாய்ப்பை பெற்று பயன்பாட்டிற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் பெருவெள்ள பாதிப்பு உள்ளிட்டவைகளின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது மாவட்டத்தில் உள்ள 13 துறை சார்ந்த அதிகாரிகளுடன் பொது கணக்கு குழு ஆய்வு நடத்தியுள்ளது பல்வேறு பரிந்துரைகளையும் விளக்கங்களையும் கேட்டுள்ளது துறை சார்ந்த செயலாளர்கள் சென்னையில் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாசடைந்து வரும் தாமிரபரணி நதியை கழிவுநீர் கலக்காமல் தடுப்பு அமைக்க குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரிகம் தாமிரபரணி நதியில் இருந்து தான் ஆரம்பமாகிறது என பெருமை பேசும் நிலையில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது தமிழர்களின் தலையாய கடமை. சென்னையில் கழிவுநீர் கலக்காத தண்ணீருக்காக ஆதனூரில் இருந்து சைதாப்பேட்டை ஆறு வரை வீடுகள் இருக்கும் இடம் கழிவு நீர் கலக்கும் இடங்கள் கண்டெறியப்பட்டு கழிவுநீர் கலக்காமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அங்கு சாத்தியப்பட்டுள்ளபோது நெல்லையிலும் அத்திட்டம் சாத்தியப்படும் தாமிரபரணி நதியை பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டத்தை அமைக்க வேண்டும் தாமிரபரணி நதியை பாதுகாக்க சிறப்பு திட்டத்தை தீட்ட வேண்டும் என பொது கணக்கு குழு சார்பில் சட்டமன்றத்தில் வலியுறுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா சேரன்மகாதேவி சாரார் ஆட்சியர் அரபித் ஜெயின், மாநகர தலைமை இடத்து காவல்துறை துணை ஆணையாளர் அனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்