in ,

தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024)

வன்னியர் இட ஒதுக்கட்டை தர மறுத்தால் மாநிலம் தழுவிய போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது,
வன்னியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருக்கின்றார்கள். இந்நிலையில் வன்னியர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக தற்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுக்கின்றது.

நான் சாதாரண மருத்துவராக இருந்த போது தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றேன். தற்பொழுது பாமக வலிமையான ஒரு கட்டமைப்போடு உள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மறுத்தால் நாடு தழுவிய போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்..

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சம்பவத்தில் சட்டமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக அமைச்சர் சிவசங்கர் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைகளில் தவறான கருத்துக்களை கூறி வருகின்றார் என்று கூறினார். மேலும் அவர் பேசும்போது, இனிமேல் இது போன்று தவறுகள் நடைபெறாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும். மாறாக தமிழக முதல் வரும் ,அமைச்சரும் இந்த சம்பவத்தில் அவையை தவறாக திசை திருப்பி வருகின்றனர்.

இதனால் இருவர் மீதும் பாமக சார்பில் உரிமை மீறல் பாச்சனை எழுப்ப உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் திமுகவினர் தொடர்பில் இருப்பதாலும், மெத்தனால் பயன்படுத்தும் சம்பவம் சில மாநிலங்கள் சம்மந்தப்பட்டிருப்ப
தாலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.மேலும் அவர்,தமிழகம் முழுவதும் மது சம்மந்தமான பிரச்சனைகளுக்கு முழு காரணம் திமுக. தான் காரணம்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சியில் மது சம்மந்தமாக ஒரு தலைமுறையே அறியாமல் இருந்த நிலையில் மீண்டும் மதுவை திமுகவினர் தான் கொண்டு வந்தனர். மதுவினால் நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. நாட்டிலயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். இவற்றைப் போக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமுல் படுத்த வேண்டும் என்றார். மேலும் அவர், வரும் காலங்களில சட்டசபை 100 நாட்ககள் நடத்தப்படுவதோடு, நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

 

 

தமிழகத்தில் இல்லம்தேடி கல்வி என்பது மாறி இல்லம் தேடி சாராயம் என்ற நிலைக்கு வந்துவிட்டது

விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் – கள்ளக்குறிச்சி கள ஆய்வு அறிக்கை வெளியிட்ட பின்னர் எவிடன்ஸ் கதிர் பேட்டி

கள ஆய்வன்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் 2 MLA க்களோடு தொடர்புபடுத்தி கூறுகின்றனர் – கதிர் பேட்டி

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் இன்று நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கள ஆய்வு அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்துபேசினார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் 64பேர் உயிரிழந்துள்ளனர் இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இதுவரை 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்த போது நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று இனி ஒரு சொட்டு கள்ள சாராய விற்பனை நடக்காது என கூறினார். ஆனால் இப்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு. உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம்

கருணாபுரத்தில் காவல்நிலையம், கோர்ட், கலெக்டர் ஆபிஸ் அருகே விஷ சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. இந்த விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும், எனவும், மருத்துவமனையில் RED ZONE மற்றும் DARK ZONE வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவிக்க மக்களை திசை திருப்புகின்றனர், தமிழகத்தில் 45ஆயிரத்தில் 862 கோடிக்கு டாஸ்மாக் வியாபாரம் நடைபெற்றுள்ளது.

54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கோண்டோம் – இதில் பட்டியலினத்தவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெண்களும் குறைந்த வயதுடையவர்களாக உள்ளனர். உயிரிழந்துவிடுவார்கள் என்ற நிலைமையில் உள்ள DARK RED ZONE ல் – அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ சாராயத்தில் உயிரிழந்தவர்களில் 28 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்துவருகின்றனர். இதில் 11. பெண் குழந்தைகள் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் மாலை 4 முதல் 7 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாள்தோறும் காவல்துறையினர் தூரமாக நின்று லஞ்சம் வாங்கி சென்றுவந்துள்ளனர். 18ஆம் தேதியே கள்ளசாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர். ஆனால் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கள்ளச்சாராய மரணம் இல்லை என்றார்

தலித் மக்கள் அதிகமாக இருக்ககூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது., சிறுவர்களும் கள்ளச்சாராயம் குடித்துவருகின்றனர். 18ஆம் தேதியே விஷ சாராயம் அருந்திய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர்

கள்ளக்குறிச்சியில் மாதவசேரியில் கோவிலில் வைத்து பூசாரி கள்ளச்சாராயத்தை விற்றுள்ளனர்,

இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பது போல் மாறிவிட்டது தமிழ்நாடு

உளவுத்துறைக்கு கள்ள சாராய விற்பனை குறித்து தெரியாதா? கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளித்தால் புகார்தாரரை வீடு்தேடிவந்து புகார் மனுவை காண்பித்து மிரட்டிசெல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டுவருகின்றது

தமிழக அரசு கள்ள சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டது அரசின் இயலாமை, மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காக்தான் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுதொகை அளித்துள்ளனர்

கள்ளச்சாராய மரண விவகாரத்தில் SC ST வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட முடியாது என SC ST மாநில ஆணையம் தெரிவிக்கின்றது. ஏற்கனவே குண்டாசில் இருந்த கோவிந்தராஜ் என்ற நபர் மூலமாக தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது

தற்போது பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்படுகிறது. முதலமைச்சர் ஒரு சொட்டு விற்பனை ஆகாது என கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது, எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துவமனைக்குள் ICU வார்டுக்குள் அனுமதிக்கவில்லை , மரண விவரத்தை முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை காவல்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர்

எங்களை ஆய்வுக்கு செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என 2 MLA, ஒரு அமைச்சர் மூலமாக உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்தது, கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரண விவகாரத்தில் உச்சநீதிமன்ற தானாக முன்வந்து ஒரு விசாரணை குழு உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளிவரும், சிபிசிஐடி விசாரணை வெளிப்படையாக இருக்காது, காவல்துறையை காட்டிக்கொடுக்க மாட்டார்கள், சிபிஐ விசாரணையும் நம்ப முடியாது, ஆதி திராவிட மக்களுக்கான ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை விட 10 மடங்கு மதுபான விற்பனை அதிகமாக உள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை ஏன் துறைக்கு சம்மந்தம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

உயிரிழந்தவர்களின் குழந்தைகைகளின் கல்வி உதவித்தொகை 10ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு ஊராட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளையும், சங்கிலி தொடர் குற்றவாளிகளையும் கண்டறிய வேண்டும் என்றார்

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கலந்தாய்வு கூட்டம், கருத்துகேட்பு கூட்டம், நடத்த வேண்டும் , மதுரை மாவட்டத்தில் மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. ஆப்ரேசன் கஞ்சா என்பது ஏன் கொண்டுவரப்பட்டது. மதுவிற்பனை கள்ள சாராய விற்பனை போதைப்பொருள் விற்பனை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்

மருத்துவமனை போல மூன்று கட்டங்களாக பிரித்து போதைப்பொருள் விற்பனைகளை கட்டுப்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து முழுமையாக ஆய்வுசெய்து வெள்ளை அறிக்கை தயாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

கள்ளச்சாராய விவகாரத்தில் 2 MLA க்கள் குறித்து ஏன் ? சொல்கிறீர்கள் என கேட்டால் அவர்களுக்கு தெரியும் என கள ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் ,

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒரு நபர் கமிசன் , சிபிசிஐடி விசாரணை, இழப்பீடு தொகை என கூறி ஏமாற்றிவிடுவார்கள்

அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனை மனித உரிமை ஆணையம் நிச்சயமாக நேரில் விசாரணை நடத்த வேண்டும், தமிழகத்தின் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் முழுமையாக இல்லவே இல்லை என்ற நிலை தான் உள்ளது, தமிழகத்தில் ஆணவப்படுகொலை சட்டம் தேவையில்லை என்றார் ஆனால் மதுரையில் பட்டியலின பிரிவுகள் இடையே ஒரு இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்

எதிர்கட்சியாக இருக்கும் போது ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்றார் ஆனால் இப்போது வேண்டாம் என்கிறார். கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சர் சந்திக்கவில்லை, அரசியலுக்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் சொந்த மாநில மக்களை சந்திக்காததது ஏன்?

மத்திய அரசை சார்ந்தவர்களும் ஏன்? கள்ளக்குறிச்சி செல்லவில்லை, கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் அதிகாரிகளின் முழுமையான தோல்வியை முதலமைச்சர் ஒத்துக்கொள்ள மாட்டாரா?

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும், குழந்தைகள் நல ஆணையமும் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் , கள்ளச்சாராயம் விற்பனையின் போதும் சாதிய கட்டுப்பாடோடு விற்பனை நடைபெற்றுள்ளது.

அந்த்தந்த சாதிகளை சேர்ந்த வியாபாரிகளிடம் அந்தந்த சாதி மக்கள் வாங்கி குடித்துள்ளனர்,

திமுக ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தர்மசாணம்பட்டி பகுதியை சேர்ந்த இலங்கை தமிழரான பிரியா – இவர் கணவனை பிரிந்து தற்போது திருப்பூரில் வசித்துவருகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு சில நாட்களுக்கு முன்பாக கஞ்சா விற்க கூறி சிலர் கத்தியால் தாக்கி சிகிச்சை பெற்ற நிலையில் பாதுகாப்பு கருதி தன்னுடன் தங்கவைத்து விடுதியில் சேர்ந்து படித்துவருகிறார்.

இந்நிலையில் பிரியாவின் இளைய மகனான 10 வயதுடைய லோஹித் பிரியாவின் பெரியப்பாவுடன் மதுரையில் வசித்துவருகிறார். இதனிடையே பிரியாவின் மகனான லோஹித் கடந்த 23 ஆம் தேதியன்று தாத்தா வீட்டில் இருந்தபோது அதிகாலை இருந்து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து தனது மகனை காணவில்லை என கூறி சிறுவனின் தாயார் பிரியா கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக கூறியும், தனது மகன் காணாமல் போய் 4 நாட்கள் ஆகியும் கிடைக்காதததால் தனது மகனை கண்டுபிடித்து தரகோரியும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தார்.

தனது 10 வயது மகனை கஞ்சா விற்க வைப்பதற்காக சிலர் கடத்தியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும், தனது மகன் காணாமல் போனது குறித்த புகாரை கீழவளவு காவல்துறையினர் வாங்க மறுப்பதால் தனது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தாயார் பிரியா குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே மூத்த மகனை கஞ்சா விற்க தூண்டியபோது மறுத்த நிலையில் தனது பெரியப்பாவின் உறவினர்கள் தனது மூத்த மகனை கத்தியால் குத்தி சிகிச்சை பெற்று மீண்டுவந்த நிலையில் தற்போது இளைய மகனும் காணாமல் போனது அச்சமாக இருப்பதாக தெரிவித்த பிரியா தனது பெரியப்பா மீதான போக்சோ வழக்கில் சாட்சியாக இருக்க பிரியா என்ற பெயருக்கு பதிலாக மலர்ஜோதி என்ற பெயரில் வழக்கில் ஆஜராக வேண்டும் என கீழவளவு காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டுவதாகவும் குற்றசம்சாட்டினர்.

 

 

நாகை அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும்போது 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அடியோடு அகற்றம்; சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கொந்தளிப்பு; மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

பேட்டி: தமிழ்செல்வன் விவசாயி

நாகப்பட்டினம் மாவட்டம் வெண்ணாறு வடிநிலை கோட்டத்திற்கு உட்பட்ட ஓடம்போக்கி பாசன வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலான நண்டு கன்னி வாய்க்கால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நீண்டுள்ளது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் சுமார் நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்த நிலையில் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத நிலையில் தற்போது பட்டமங்கலத்தில் இருந்து கடலில் கலக்கக்கூடிய நண்டு கன்னி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பட்டமங்கலம் ஊராட்சியில் இருந்து செல்லக்கூடிய வாய்க்கால் ஓரங்களில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்களை தூர்வாரும் பணியின் போது வெட்டி சாய்த்து வயல்களை நிரப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்ட பனைமரம் வெட்டுவதற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே பனை மரங்களை வெட்ட வேண்டும் என்ற சட்டமும் மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் வேளாண்மை துறை அறிவிப்பிற்கு முரண்பாடாக நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதற்கு விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

 

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரெண்டு கோடியே 88 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் விடப்பட்டது .

திருவாரூர் மாவட்டம் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது கோடைகால பணப்பயிரான பருத்தி சாகுபடிகள் இந்த ஆண்டு விவசாயிகள் ஈடுபட்ட நிலையில் தொடர் மலை மற்றும் கடுமையான வெயில் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பருத்தி மகசூல் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் பருத்தி திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூட மூலம் விற்பனைக்கு வருகிறது .

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4157 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ரூபாய் இரண்டு கோடியே 88 லட்சத்து 27 ஆயிரத்து 524 ரூபாய்க்கு ஏலம் போனது .

குறிப்பாக அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு 7,409 ரூபாயும் குறைந்தபட்சமாக 5,714 ரூபாய்க்கும் பருத்தி ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அருப்புக்கோட்டையில் எமதர்மன் வேடமணிந்த நபர் மூலம் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ் பி கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது.‌ இந்த விழிப்புணர்வு பேரணியை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். எஸ் பி கே பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி எஸ் பி கே பள்ளி சாலை, சிவன் கோவில் சந்திப்பு, மதுரை ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி போதை பொருள் பயன்படுத்த வேண்டாம் என்பது குறித்து விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் எமதர்மன் வேடம் அணிந்த நபர் மூலம் கிராமிய பாடல்கள் இசைக்கப்பட்டு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

 

 


Watch – YouTube Click

What do you think?

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்

விஜய் கட்சிக்கு TVK… ன்னு பெயர் வெச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா