in

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024) – 02


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024) – 02

 

ஒட்டன்சத்திரம் அருகே சிப்கோ தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது .

திண்டுக்கல் மாவட்டம் கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெடிக்காரன் வலசு கிராமத்தில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அரளிக் குத்து குளம் உள்ளது.

இந்த குளத்தால் சுமார் 35 கிராம மக்களுக்கு விவசாய தேவைக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் விளங்கி வருகிறது இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இந்தக் குளத்தில் அரசு மூலமாக சிப்கோ தொழிற்சாலை அமைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த குளத்தில் தொழிற்சாலை அமைந்தால் இங்குள்ள 35 கிராம மக்களுக்கும் வாழ்வாதாரமும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்று பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று வனத்துறை மூலமாக குளத்தில் உள்ள மரங்களைக் கணக்கெடுத்து மரங்களில் நம்பர் போடும் பணி தொடங்கியது.

இதனை தடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆண்களும் பெண்களும் குளத்தை முற்றுகிட முயற்சி செய்து நம்பர் போடும் பணியை தடுக்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தியம் காவல்துறையினர் ஆங்காங்கே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குளம் அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என விவசாயிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தொப்பம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தற்பொழுது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டாரத்தில் 2549 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.இன்று நெடுந்தீவு அருகே நாட்டு படகு மீனவர்களை இலங்கை அரசு அத்துமீறி கைது செய்துள்ளது , மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு கடந்த 10 ஆண்டுகளில் இருந்த கண்டு கொள்ளாத நிலையே 11- வது ஆண்டும் தொடர்கிறது, மீனவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளவு கொண்ட கொடுமுடியாறு அணை உள்ளது. தற்போது நீர் இருப்பு 51 அடி உள்ளது. இந்த அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார் . இதனை அடுத்து இன்று 1- ந்தே ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். முதல்வர் உத்தரவுப்படி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள வள்ளியூரான் கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் 2549 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் இன்று 01-07-24 முதல் 28-10-2024 வரை 120 நாட்களுக்கு 50 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். மேலும் மழை தொடர்ந்து அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தால் வடமலையான் கல்வாயிலும் 100 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்படும் இஎன் மூலம் 3231 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் 4 நாட்டு படகில் சென்ற பாம்பனை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இதுவரை விசைப்படகு மீனவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் இன்று முதல் முறையாக நாட்டு படகு மீனவர்களுக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கை அரசு தொடர்ந்து நமது மீனவர்களை தொந்தரவு செய்து வருகிறது மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமரிடமும் வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையில் கடந்த 10 ஆண்டுகளாக எப்படி கண்டு கொள்ளாமல் இருந்ததோ அதேபோல் தற்போது பதினோராவது ஆண்டாகவும் அதே நிலை நீடிக்கிறது ஒன்றிய அரசு மீனவர்கள், வெளியுறவுத்துறை, தமிழக அரசு, நீர்வளம், மீன்வளத்துறை இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும், முன்பு மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் படகுகள் விடுவிக்கப்பட்டது, தற்போது படகுகளும் விடுவிக்கப்படாத்தால் பல லட்சம் மதிப்புள்ள படகுகள் சேதமடைகிறது, எனவே ஒன்றிய அரசு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், களக்காடு நகராட்சி துணை தலைவர் பி.சி.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக் ஒன்றிய செயராளர் ஜோசப்பெல்சி, மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் கோவில் பாலலயம் பணிகள் துவக்கம். சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இந்தக் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக பாலாலயம் மற்றும் திருப்பணிகள் இன்று துவங்கியது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஹோமகுண்டங்கள் வளா்த்து கணபதிஹோமம் மூலமந்தரஹோமம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து விமானம் மற்றும் பாிவாரமூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. முன்னதாக கோவிலுக்கு வருகை தந்து அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு சபாநாயகர் துவக்கி வைத்தார். இந்தக் கோவிலுக்கு பாலாலய பணிக்கு ரூபாய் 64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை உடனடியாக வழங்க கோரி நாகையில் 6 ஒன்றியங்களில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்:

பேட்டி: மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காத நிலையில் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்து போனது இதனால் கூலி தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் இன்று மாவட்டத்தில் நாகை திருமருகல் கீழ்வேளூர் கீழையூர் வேதாரண்யம் தலைஞாயிறு உள்ளிட்ட ஆறு ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியம் கடத்தெருவில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் பேரணியாக சென்று கீழையூர் ஒன்றிய அலுவலகம் முன்பு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குறுவை சாகுபடி இல்லாமல் வறுமையில் வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும் ஆறு வாய்க்கால் குளங்களை பழைய முறைப்படி தூர்வாரிட வேண்டும், கோயில் மடம் புறம்போக்கு போன்ற இடங்களில் குடியிருந்த வரும் குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும், கலைஞரின் கனவு இல்லத்தை கூரை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு செல்வம் விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒன்றிய தலைவர் பக்கிரிசாமி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் பங்கேற்றனர். 100 நாள் வேலையை விரைவில் தொடங்கவில்லை எனில் வரும் 9ம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

 

 

வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் முறையான குடிநீர் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கடைத் தெருவில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க கோரியும், 100 நாள் வேலையை உடனடியாக அனைத்து பகுதிகளிலும் தொடங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியம் முழுவதும் 100 நாள் பணிகள் நடைபெறாமல் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. எனவே இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் சரிவர குடிநீர் கிடைக்காததால் தாலுக்கா முழுவதும் உள்ள பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம்

மற்றொரு தரப்பு வழக்கறிஞர்கள் சட்ட பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டதால் இரு தரப்பு வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் – தள்ளுமுள்ளு பரபரப்பு – காவல்துறையினர் குவிப்பு.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் சட்ட எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள 3 சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்து இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முப்பெரும் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில்., முப்பெரும் சட்டங்கள் குறித்து அந்தந்த மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களுக்கும் மற்றும் மாநில காவல்துறைக்கும் முறையாக அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கத்தினர் மத்திய அரசின் முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இன்று முதல் ஜூலை 8-தேதி முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்..

அதன்படி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர் திருத்தங்களை செய்ததை உடனே நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் முப்பெரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கம் போல் தங்களது பணிக்கு செல்வதாக கூறி சில வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக 3 சட்ட திருத்த பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.. அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆதரவு, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்துசென்ற நிலையில் மீண்டும் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய நிலையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

 

 

கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு – நீதிமன்ற உத்தரவுபடி 73 க்கு கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது – போலீசார் குவிப்பு – பரபரப்பு

மதுரையின் மையப் பகுதியாக உள்ள டவுன்ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சுற்றிலும் 99 கடைகள் வாடகைத்தார்களாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவருகின்றனர்

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள 73 கடைகளுக்கு இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டு சீல்வைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்

சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் – 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு – பரபரப்பு

தெப்பக்குளத்தை சுற்றி மேற்கு, வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்த 99 கடைகளில் 26 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மீதியுள்ள 73 கடைகளுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி நடைபெற்றுவருகிறது

முப்பெரும் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாக்குவாதம் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமான காவல் துறையினர் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்

 

 

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றுவதோடு, அதன் சட்ட திட்ட விதிகளையும் மாற்றி இன்று முதல் ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது

இதற்கு நாடெங்கும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒன்றிய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் கும்பகோணம் நீதிமன்ற முன் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த ஒரு வார காலமாக கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்ததுடன், தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024)

எந்திரன் படத்தை மிஸ் பண்ணிட்டேன்..கமல் வருத்தம்