in

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (03.07.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (03.07.2024)

 

நத்தம் அருகே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத மயானம் – பல கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்பட்டியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக ஊருக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மயானம் உள்ளது. அந்த மயானத்திற்கு செல்வதற்கு போதிய பாதை வசதியோ மின் வசதியோ இல்லை. மேலும் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக நீர் மாலை எடுக்கப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் நீர் நிரப்பப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் மொட்டை அடித்து குளிப்பதற்கு வசதியாக அடிகுழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிகுழாயும் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று தலைச்சுமையாக குடத்தில் நீர் எடுத்து வந்து மொட்டை அடித்து குளித்து இறுதிச்சடங்கில் ஈடுபட்டு வருகின்ற அவல நிலை நீடித்து வருகிறது. மயானத்தைச் சுற்றிலும் முட்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மிகவும் குறுகலான பாதையில் தவிர்க்க முடியாத சில நேரங்களில் இரவு நேரத்தில் இறந்தவர் உடலை கொண்டு வரும்போது மின் வசதி இல்லாத காரணத்தினால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலும் உள்ளது என தெரிவித்தனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து மயான பாதை மின் வசதி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

இந்திய தண்டனை சட்டம்,குற்றவியல் சட்டம், சாட்சிய சட்டங்களை இந்தி மொழியில் மாற்றுவதை கண்டித்து மாயூரம் வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற புறங் கணிப்பு செய்து ஆர்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நீதிமன்ற வாயிலில் வழங்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்கு மாயூரம் வழக்கறிஞர் சங்க தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார்.மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் வேலு. குபேந்திரன் முன்னிலை வசித்தார். ஆர்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டத்தை,பாரதிய நியாய சன்ஹிதா என்றும்,குற்றவியல் சட்டத்தை பாரதிய நக ரிக் சுரக்ஷா என்றும்,சாட்சிய சட்டத்தை பாரதிய சாட்சிய அதினயம் என்று இந்தி மொழியில் மாற்றும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். இந்த இந்தி மொழி மாற்றுவதை கண்டித்து கடந்த 1-7-24 முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறங்களித்தும் வருகின்றனர். முடிவில், வழக்கறிஞர் சங்க செயலாளர் பிரபு.கனி ஆகியோர் நன்றியுரை ஆற்றினார்.ஆர்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்

 

 

மாம்புள்ளி புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தல ஆண்டு திருவிழா : சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்ற தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாம்புள்ளி கிராமத்தில்
பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தல 29 – ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றனர்

இன்று விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “செல்வத்தை அல்ல கடவுளை நம்புவோர் தளிரென தழைப்பர்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி மறையுரை ஆற்றினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், மனிதநேயம் நிலைத்திடவும் வேண்டி மக்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.

கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நடைபெற்றது.புனிதபிரான்சிஸ் சவேரியார் திருஉருவம் தாங்கிய தேர்கள் ஆலய வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் நாட்டாமைகள் கிராமவாசிகள் ஸ்ரீ நாகமுத்து மாணவர் குழு மற்றும் மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சாதிச் சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை திரும்ப அளித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் எடகீழையூர் ஊராட்சியில் 35-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நீண்ட காலமாக மாவட்ட நிர்வாகத்தால் சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் பள்ளி கல்லூரிகளில் கல்வி பயில்வதற்கும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறவும் தங்களால் இயலவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இருளர் இன மக்கள் தங்களது அரசு ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவட்றை அலுவலக வாயிலில் வைத்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக தங்களுக்கு இருளர் இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக வாசலில் அரசாணை 243ஐ கைவிட வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு சார்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு 60 ஆண்டுகளாக இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி புதிய அரசாணை 243 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பதை மாற்றி, மாநில அளவிலான முன்னுரிமை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடும். எனவே அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசாணை 243 இன் படி நடைபெறும் ஆசிரியர்கள் கலந்தாய்வு பொது மாறுதலை ரத்து செய்ய வேண்டும். மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளான எமிஸ் வலைதள பதிவில் இருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பல்வேறு பிற பணிகளை வழங்குவதை கைவிட வேண்டும். மாணவர்களின் கல்விநலன் கருதி அவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஈவேரா, பாலமுருகன், காசிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் ரவி மற்றும் முரளி, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.

 

மதுரையின் அணில்களின் காப்பாளன் – அணில்களுக்காக வாழும் வியாபாரி….

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த வியாபாரியான திருப்பதி

இவர் நரசிங்கம் சாலையில் தனது தந்தை காலத்தில் இருந்து கடந்த 50 வருடங்களாக எண்ணெய் கடை ஒன்று வைத்து நடத்திவருகிறார்.

இவர் சிறு வயதில் இருந்து அணில், பூனை ,வீட்டு விலங்குகள் பறவைகள் மீது மிகுந்த அன்போடும் பாசத்தோடும் இருப்பதால் அதனை வளர்த்துவருகிறார்.

இந்நிலையில் திருப்பதி தனது கடையின் அருகே இருந்த கோவிலில் உள்ள மரத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அணில் குட்டிகள் கீழே விழுந்ததை பார்த்து அவற்றை கடையில் எடுத்து வந்து உணவுகளை வழங்கிவுள்ளார்

இதனையடுத்து அந்த அணிலானது நாள்தோறும் திருப்பதியுடன் அன்பாக பழக தொடங்கியது. இதனால் அந்த அணிலானது அவரது உடம்பு முழுவதிலும் இறங்காமல் சுற்றி சுற்றி வர தொடங்கியது

எப்போதும் திருப்பதி கடைக்கு வந்தவுடன் டிச்சு என கூப்பிட்டவுடன் அணில் அவரது கையில் ஏறிக்கொண்டு தோளில அமர்ந்து கொள்கிறது.

அதனை கொஞ்சி கொஞ்சி விளையாடிய பின்னர் தனது வியாபாரத்தை தொடங்குகிறார்.

அவர் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அணில் தோளிலும் இடுப்பிலும் ஏறி உட்கார்ந்து கொண்டாலும் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வியாபாரம் பார்த்துவருவார்.

இதனால் கடைக்கு வரக்கூடிய வியாபாரிகள் திருப்பதியின் உடல் முழுவதும் அணில் சுற்றிவருவதை வியப்புடன் பார்த்துச் செல்வார்கள்.

அணில் வளர்ந்தவுடன் அதனை அப்படியே விட்டுவிடுவார் அது தானாக ஆங்காங்கே சென்றுவிடும் இதனையறிந்த பொதுமக்கள் ஆங்காங்கே காயம் பட்டு கிடக்க கூடிய அணில்கள் காக்கைகள் பறவைகளை திருப்பதியிடம் கொடுத்துவருகின்றனர்.

இதையடுத்து அணில் , பறவைகள் ஆகியவற்றை பராமரித்து அதனை மீண்டும் பறக்க விட்டுவிடுவார் ஆனால் அணில்கள் மீது அளவில்லா பாசம் வைத்துள்ள திருப்பதி 100க்கும் மேற்பட்ட அணில்களை வளர்த்து மரங்களில் விட்டுள்ளார்

அணில்களை வளர்ப்பதால் கடையில் உள்ள பொருட்களை கடித்த உடன் அந்த பொருட்களை அணிலுக்கே உணவாக வைத்து விடுவேன் என்றார்

தனக்கு பிள்ளைகளை விட அணில்கள் மீது தான் பாசம் அதிகம் எனவும் வீட்டில் மனைவி, பிள்ளைகள் சாப்பிடாவிட்டால் கூட எந்த வித கவலையும் இருக்காது ஆனால் அணில் சாப்பிடாமல் இருக்க விட மாட்டேன் எனவும், அணில்கள் இருப்பதால் வெளியூர்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவேன் என்கிறார்

குறிப்பாக நீண்ட நாட்களாக தான் வளர்த்த அணில் ஒன்று தன்னை விட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட தருணம் குறித்து கண்கிழங்கி பேசினார்

ஒவ்வொரு அணிலுக்கும் என்றும் தனித்தனி பெயர் வைக்க கிடையாது என்றாலும்

தாய் இல்லாமல் தவித்த இரண்டு அணில் குஞ்சுகளுக்கு இங்ஃபில்லர் மூலம் காய்ச்சிய பாலை கொடுக்க அவற்றை உற்சாகமாக பிடித்து குடித்து வருகிறது அந்த பிஞ்சு அணில் குஞ்சுகள்

தரையில் சிதறி கிடக்கும் தானியங்களை பொறித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாது மதிய உணவிற்காக தான் கொண்டு வந்த சோறு எடுத்து கையில் போட அணில் தனக்கே உரித்த பானியில் மெல்ல கொறித்து தள்ளியது

இன்றைய காலகட்டத்தில் தாயுள்ளத்தோடு சுயநலம் பாராமல் அண்ணல்களைப் பேணிப் பாதுகாத்து வரும் இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது

 

 

முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மூன்றாவது நாளாக போராட்டம், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தல்லாகுளம் தலைமை அஞ்சலக அலுவலகம் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் சட்ட எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் இன்று மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள 3 சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்து கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முப்பெரும் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில்., முப்பெரும் சட்டங்கள் குறித்து அந்தந்த மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களுக்கும் மற்றும் மாநில காவல்துறைக்கும் முறையாக அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கத்தினர் மத்திய அரசின் முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஜூலை 8-தேதி முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்..

அதன்படி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர் திருத்தங்களை செய்ததை உடனே நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து முதல் நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய வழக்கறிஞர்கள் இன்று மூன்றாவது நாளாக மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தபால் தந்தி அலுவலகம் வரை பேரணியாக சென்று தல்லாகுளத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (03.07.2024)

ஐரோப்பா செய்திகள் | EUROPE NEWS TAMIL – 04-07-2024