இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (05.07.2024)
ராகுல் காந்தி விரைவில் பிரதமர் ஆவார்- நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் எம்பி பேச்சு
இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளரும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினருமான ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் இன்று காலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லைக்கு வருகை தந்தார் தொடர்ந்து அவர் வேலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை ,அண்ணா சிலை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, மகாத்மா காந்தி சிலை, வ.உ.சி.சிலை செல்ல பாண்டியன் சிலை, அழகு முத்துக்கோன் சிலை,ஒண்டிவீரன் சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
முன்னதாக வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தார் அவருக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார் அப்போது அவர் ராகுல் காந்தியை எள்ளி நகையாடியவர்கள் தற்போது அவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர், பாராளுமன்றத்தில் பேசாத பிரதமர் முதல் முறையாக தற்போது பேசுகிறார், அனேகமாக ஓராண்டுக்குள் ராகுல் காந்தி பிரதமராக வருவார் அதற்கான சூழலும் ஏற்பட்டு வருகிறது, ஒன்றிய அரசு தற்போது கூட்டணி தயவில் தான் ஓடுகிறது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் .இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதாக சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழக மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
சதுரகிரி கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். மாதந்தோறும் பிரதோஷம் , அமாவாசை , பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை 3 .7. 24 அன்று முதல் 6.7. 24 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை மலைக்கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை எனவும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் 5 கிராமங்களை சேர்ந்த 750 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு, சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி விவசாயிகள் பெண்கள் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே விழுப்புரம் நாகப்பட்டினம் இடையிலான நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது இதற்காக சாலை விரிவாக்க பணிகள் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது மின்நிலையில் பூம்புகார் அருகே சங்கிருப்பு நடராஜர் பிள்ளை சாவடி, கருவிழந்தநாதபுரம், கிடாரங்கொண்டான் ஆகிய கிராமம் ஊராட்சிகளை சேர்ந்த ஐந்து கிராமங்களில் வயல்வெளிகளுக்கு செல்லும் பாதை சங்கிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாதையை அடைப்பு நான்கு வழிச்சாலை செல்வதால் விவசாயம் செய்த பொருட்களை வெளியே எடுத்து வருவதற்கும் விவசாயம் செய்வதற்கு டிராக்டர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு செல்வதற்கும் பாதை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது இதனால் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயி நிலங்களுக்கு செல்ல ஏதுவாக சுரங்க வழி பாதை மற்றும் நான்கு வழிச்சாலையின் நடுவே திறப்பு ஒன்றை அமைத்து தரும்படி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர் ஆனால் அணுகு சாலை அமைத்து தருவோம் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது இதன் காரணமாக விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது இதனால் நேரம் மற்றும் பொருள் விரயம் ஏற்படும் என்றும் சுரங்கப்பாதை மற்றும் சென்டர் மீடியம் வழி செய்து தரக்கூறு விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கருவிழந்தநாதபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்திய சம்பவத்தில் வண்டிகளை பறிமுதல் செய்து ஒருவர் கைது. தலைமறைவான இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலத்தில் கடந்த சில தினங்களாக மாட்டுவண்டி மூலம் மணல் கடத்தல் ஈடுபட்டு வருவதாக பந்தநல்லூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ண ராஜா தலைமையில் போலீசார் தீவிரதம் வந்து பணி மேற்கொண்டனர் அப்போது மாட்டு வண்டிகளின் உரிமம் இல்லாமல் மணல் எடுத்து வந்ததை விசாரித்ததில் பந்தநல்லூர் அருகே வேட்ட மங்கலம் காந்தி நகர் பகுதியில் சேர்ந்த தங்கராசு மகன் பெரியசாமி (61) பெரியசாமி மகன் செல்லமுத்து (40) மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (52) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் பெரியசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்து தமிழ்செல்வன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகையில் வட்டார அளவிலான பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குடிநீர், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து பாடல் நாடகம் சிறு விளையாட்டு மூலம் விழிப்புணர்வு பயிற்சி:
பேட்டி: சாந்தி உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் கீழையூர் வட்டாரத்தில் கிராமலயா நிறுவனத்தின் மூலம் நடுநிலை உயர்நிலை மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தன் சுத்தம் பேணுதல், குடிநீர், பள்ளிக் குழந்தைகளின் மாதவிடாய் சுகாதாரம் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது இப்பயிற்சி திருப்பூண்டி வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
இப்பயிற்சினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பயிற்சியில் உதவி திட்ட அலுவலர் சாந்தி வட்டார கல்வி அலுவலர் லினஸ் திருப்பூண்டி வடக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன் மேற்பார்வையாளர் பொறுப்பு மகிமை ரூபீஸ், மார்ட்டின் பாக்கியராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்
தொடர்ந்து கிராமாலயா DBSI திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சிவனேசன், ரம்யா, ஜான்சி ராணி, ரேணுகா தேவி, கலையரசி, ஆகியோர் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், குடிநீர் மற்றும் அதனை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை குறித்து பாடல் நாடகம் சிறு விளையாட்டு மூலம் விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர். மேலும் பள்ளியிலேயே சோப்பு, பினாயில் தயாரிப்பது குறித்து செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து ஊட்டச்சத்து மற்றும் நோய் குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பயிற்சியின் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களைவாபஸ் பெறக்கோரி முற்றுகை போராட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும்
வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் புரியாத குற்றவியல் சட்டங்களை உடனே வாபஸ் பெற கோரியும்
மூன்று குற்றவியல் சட்டங்களை முன்பு இருந்தது போலவே ஆங்கில மொழியில் தர கோரியும்
மூன்று குற்றவியல் சட்டங்களையும் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைமுறைப்படுத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும்
நடைமுறைக்கு ஒத்துவராத மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தொடர் போராட்டங்களை நடத்த போவதாகவும்
எனவே மத்திய அரசு உடனடியாக மக்கள் விரோத சட்டங்களை வாபஸ் பெற்றிட வேண்டும் என வலியுறுத்தி
அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
இதில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமானவழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள்கலந்து கொண்டு உள்ளனர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
இதில் பிரதான கோரிக்கையாக இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி புதிய சட்டங்களாக தாக்கல் செய்துள்ளவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றியும், மசோதாவில் பல்வேறு ஷரத்துகளை புதிதாக திணித்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பஞ்சமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கோவி .கண்ணன், கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.