இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (06.07.2024)
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெற்பயிரில் ஆனைக் கொம்பன் நோய் மற்றும் இலை அழுகல் நோய் தாக்குதல் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம், மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆடுதுறை 36, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 ஆகிய சன்ன ரக நெல் மற்றும் ஏஎஸ்டி 16 மோட்டோ ரக நெல் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காத காரணத்தால் பம்புசெட் நீரை கொண்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதிகளில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்மேற்குப் பருவ மழை முறையாக பெய்யாத நிலையில் பயிர்கள் செழிப்பின்றி பூச்சிதாக்குதல்கள் காணப்படத்தொடங்கியது. கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தாலும் அதிக அளவில் குறுவை நெற்பயிர்களில் ஆனை கொம்பன் ஈ தாக்குதல் காணப்பட்டடுகிறது. இதன் காரணமாக தண்டு உருளும் தண்டின் உள்ளே ஈ சென்று சாற்றை உறிஞ்சி விடுவதால் பயிர்கள் கருகி விடுகின்றன இதே போல் இலைகள் நோயும் ஏற்பட்டுள்ளது. பருவத்தில் தாக்குதல் தென்பட்ட வயல்களில் விவசாயிகள் அதற்கான பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஏக்கருக்கு மருந்து செலவு மற்றும் ஆள் கூலியுடன் சேர்த்து 1500 ரூபாய் வரை கூடுதல் செலவு பிடிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மகசூல் குறையும் என்பதால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படும் என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்
வேதாரண்யம் அருகே கோவில்பத்து அரசு தானியக்கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து 200 மேற்பட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டம்;
பேட்டி :-சுமைதூக்கும் தொழிலாளர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோவில்பத்து ஊராட்சியில் ஆசிய கண்டத்திலேயே இரண்டாம் இடம் வகிக்கும் தானியக்கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த இரண்டாம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்துள்ளதால் தற்பொழுது ஒப்பந்தம் எடுக்காததால் கடந்த நான்கு தினங்களாக சம்பளம் வழங்கவில்லை மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தானிய கிடங்கிற்குள் எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லாததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் தானியக்கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஆகையால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் குடோனில் காத்து கிடக்கின்றன. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஒப்பந்த தொழிலாளர்கள் லோடு ஏற்றாமல் தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணை பேராசிரியர் பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை வழங்கிடக்கோரி மாநிலம் தழுவிய உண்ணா நிலை அறப்போராட்டம் நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி எதிரே உள்ள திடலில் நடைபெற்று வருகிறது…
நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி எதிரே
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணை பேராசிரியர் பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை வழங்கிடக்கோரி மாநிலம் தழுவிய உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறக்கூடிய இந்த உண்ணா நிலை அறப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் அமர்ந்திருந்த ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் தங்கள் கோரிக்கைகள் குறித்த பதாகைகளை எழுதி வைத்திருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மூட்டா அமைப்பின் பொதுச் செயலாளர் நாகராஜன் தெரிவிக்கும் போது…. தமிழகத்தில் உள்ள உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மட்டும் குறிப்பாக அரசாணை எண் ஐந்தின் படி உரிய ஊதியம் வழங்க அரசு மறுத்து வருகிறது. தமிழகத்தில் உதவி பெறும் பேராசிரியர்களை உள்ளடக்கிய 8 மண்டலங்கள் உள்ளது. அதில் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும் உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற நடைமுறை இதுவரை தமிழகத்தில் இருந்ததில்லை. 6 மண்டலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் தர முடியாது என மறுக்கின்ற தமிழக அரசை கண்டித்து முதல்வர் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று தமிழகம் முழுவதும் சென்னை மதுரை, நெல்லை ஆகிய மூன்று இடங்களில் உண்ணா நிலை அறப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் தமிழக அரசுக்கு தெரிவிப்பது என்னவென்றால் தமிழக அரசின் நிதித்துறை நிதி ஒதுக்கிய பின்பும் உயர்கல்வித்துறை தன்னிச்சையாக ஆசிரியர்களுக்கு வரவேண்டிய சம்பளத்தை அரசாணை பிறப்பித்த பின்பும் தர மறுக்கிறது. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு தமிழகத்தில் உள்ள உயர்கல்வி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் இந்த போராட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெல் கொள்முதலில் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது என திருவாரூரில் ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் சந்திரகுமார் பேட்டி
திருவாரூர் தனியார் அரங்கில் ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத் தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் மாவட்டத் துணைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஏ ஐ டி யு சி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது…..
நெல் கொள்முதலில் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது. பஞ்சாபில் உள்ள கொள்முதல் நிலை வேறு. இதில் தமிழ்நாடு வித்தியாசமாக உள்ளது.
நெல் கொள்முதல் காலங்களில் மழை, பனி பெய்யும். ஈரப்பதம் அனுமதி இருந்தால் தான் கொள்முதல் செய்ய முடியும். ஆனால், ஒன்றிய அரசு ஈரப்பதத்துக்கு கட்டுப்பாடு விதித்து கொள்முதலுக்கு தடையாக உள்ளது.இதனால் தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
அதே நேரம் கொள்முதல் செய்யபடும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய முடியவில்லை. அதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் லட்சக்கணக்கான ரூபாய் எடையிழப்பு ஏற்படுகிறது. அந்த எடை இழப்பிற்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் பணம் கட்ட வேண்டும். இல்லையெனில் அடுத்த சீசனுக்கு வேலையில்லை என்கின்றனர்.
இதனால் தான் விவசாயிகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று லாரி மாமுலாக ரூ4 ஆயிரம், 5 ஆயிரம் கேட்கின்றனர். இதற்கும் விவசாயிகளிடம் கையேந்த வேண்டியுள்ளது. டெண்டர் எடுக்கும்போதே லாரி உரிமையளர்கள் கட்டுபடியான விலைக்கு எடுத்திருக்க வேண்டும் . அதை விடுத்து டிபிசி யில் நெருக்கடி கொடுப்பது சரியல்ல.
டிபிசி நிர்வாகம் ரெக்கவரியை காரணம் காட்டி வேலை கொடுக்க மாட்டோம் என்பதை கைவிட வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன் ,மாவட்ட தலைவர் பிரபாகர், மாவட்ட செயலாளர் மதன்முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .
குடியை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்கம் நடத்துவது என்பது கேவலமானது என்று திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளதாக மதுரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற போதை விழிப்புணர்வு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் அத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். அதுக்கப்புறமும் அமைதியா இருக்கணுமா? …மனிதனாக
இருந்தால் போராடு என்பார்கள் என மதுரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற போதை விழிப்புணர்வு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்
மதுரை கோச்சடையில் உள்ள குயின் மீரா சர்வதேச பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
பள்ளியின் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கி
போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் எழுதி, ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.ஏ. நக்கீரன், செல்லமுத்து தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், கே.ஜி.எஸ். ஸ்கேன்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், போலீஸ் சூப்பிரண்டுகள் சிவபிரசாத்( தேனி), அரவிந்த்( மதுரை), ஐகோர்ட்டு வக்கீல் சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பாடலை வெளியிட்டனர்.
விழாவில், ஐகோர்ட்டு நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் பேசும்போது:
சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன். நீ மனிதன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இது ஒரு பெரிய போராட்டம் இந்த போராட்டத்தை இந்த பள்ளி நிர்வாகம் கையில் எடுத்திருக்கிறது.
இந்த போதை பொருள் விழிப்புணர்வு விழாவிற்கு நீதித்துறை,காவல்துறை, வழக்கறிஞர் துறை, மருத்துவர் துறை என அழைத்துள்ளார்கள் பெரும் வழக்கறிஞர்கள் எல்லாம் தனது தொழிலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் போதைப்பழக்கம்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் அத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். அதுக்கப்புறமும் அமைதியா இருக்கணுமா? என்று பார்த்தால்… மனிதனாக இருந்தால் போராடு என்பார்கள் அந்தப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது பெரிய நெட்வொர்க். இதை ஒழிக்க காவல்துறை இரவு பகலாக பாடுபடுகிறார்கள்.
போதை பொருட்கள் சம்பந்தமாக வழக்கில் என்னிடம் பெயில் வாங்குவது கஷ்டம் என்றார்.
மாணவர்கள் நீங்கள் எல்லாரும் ஒவ்வொருவரும் whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக மெஸெஜ் பண்ணுங்க. நீங்க உங்க குடும்பத்தினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருத்தருக்கும் விழிப்புணர்வு மெஸேஜ் பண்ணங்க. பரவலாக பண்ணுங்க. மாவட்டம் முழுவதும் பரவனும்.
தமிழ்நாட்டிலேயே இந்தப் பள்ளிதான் இதை முன்னெடுத்து இருக்கிறது என நினைக்கிறேன்.
இதை ஒழிக்க காவல்துறை முன்னெடுக்கணும் நீதித்துறையும் சேர்ந்திருக்கணும் அதோட வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் முன்னெடுக்கனும்.
நாங்கள் எல்லாம் இது குறித்து உங்களிடம் சொல்லவில்லை என்றால் வேறு யார் இதை சொல்வது.
இப்ப உள்ள திரைப்படத்தில் எல்லாம் குடிப்பது போன்ற சீன் இல்லாமல் படங்களே இல்லை. அதேபோல டிவியில் எல்லாம் குடிபழக்கம் புகை பழக்கம் உடலுக்கு கேடு என 20முறையாவது விளம்பரம் வந்து விடுகிறது. இது ஒரு சமுதாய சீரழிவு.
குஜராத் மாநிலத்தில் அமுல் கம்பெனி பாலை விற்றதன் மூலமாக வருமானத்தை ஈட்டினார்கள் ஆனால் இவர்கள் சாராயத்தை விற்று வருமானத்தை ஈட்டுகிறார்கள். எது வளர்ச்சி என்றால் பாலை உற்பத்தி செய்து விற்று வளர்ச்சியடைந்ததுதான்.வளர்ச்சி
குடியை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்கம் நடத்துவது என்பது கேவலமானது என்று நான் சொல்லல திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளார் என்றார்.
விழாவின் இறுதியாக போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.