in

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)

 

விருதுநகர் மாவட்டம் இ குமாரலிங்கபுரத்தில் விவசாயி விற்பனை செய்த விவசாய பொருளுக்கு விற்பனை தொகையை வழங்காத அதிகாரிகள். கடன் தொல்லையால் சிக்கித் தவிக்கும் விவசாய குடும்பம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம்சாத்தூர் வட்டம் இ .குமாரலிங்கபுரத்தில் குடியிருந்து வரும் வாசுதேவன் லட்சுமி தேவி தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டதின் தாக்கம் காரணமாக படைப்புழு நோய் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகளை அதிக அளவில் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து வாசுதேவன் லட்சுமி தேவி தம்பதியினர் தங்களுடைய மக்காச்சோள பயிர்களை படைப்புழு தாக்கத்திலிருந்துபாதுகாப்பதற்கு தங்களுடைய தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தும் வெளிநபரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்று தங்களின் மக்காச்சோள பயிர்களை பாதுகாத்து வந்தனர் .

இந்நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களை அறுவடை செய்த பின்பு விருதுநகரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பால்பாண்டி என்பவரின் அறிவுறுத்தலின்படி, (Virudharasi Farmer Produceer Comepany Limited virudhunager )என்ற நிறுவனத்திற்கு குவின்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 வீதம் 1000 க்கும்மேற்ப்பட்ட குவிண்டாலுக்கு மொத்தமாக ரூ.30,55,125 லட்சம் ரூயாய் எனவும் மேற்படி பணத்தை 15 நாட்களுக்குள் தந்து விடுவதாக கூறி பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் முதல் தவணையாக கடந்த 29.5.24 அன்று முதல் தவணையாக வங்கி கணக்கில் ரூ 7.27. 875 வரவு பெறப்பட்டுள்ளது. மீதத்தொகை ரூ 23,27,250 லட்சம்இன்று வரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இது குறித்து ஒழுங்குமுறை விற்ப்பனை கூடம் கண்காணிப்பாளர் பால்பாண்டியிடம் பல முறை நேரிலும், கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்ட போது மேலே குறிப்பிப் பட்டுள்ள நிறுவனம் மூலம் பணம் வரவில்லை எனதெரிவித்துள்ளார். ஆனால் மேற்படி நிறுவனம் NATIONALAGUR CULTURE MARKET VIRUTHUNAGER.
CHALLAN KOTAK MAHINDRA CMS HUB MUMBAI மூலம் 5 கட்டங்களாக பலலட்சம் ரூபாய் அனுப்பி விட்டதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் தரப்பில் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருவதால் விவசாயி தம்பதியினர் நகைகளை அடகு வைத்து பலரிடம் வட்டிக்கு கடன்களை பெற்று விளைவித்த விவசாயப் பொருட்களுக்கு குறித்த நேரத்தில் பணம் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தங்களை தொடர்ந்து நெருக்கடி செய்து வருவதாகவும் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர் .

தாங்கள் மீண்டும் விவசாயப் பணிகளை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் இதில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையினை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடன் தொல்லை மற்றும் கந்துவட்டி தொல்லையால் 10க்கும் மேற்ப்பட்டோர் ஒரே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தம்பதி விவசாயிகளின் தற்போதைய நிலை விவசாயிகளை அச்சமடைய வைத்துள்ளது.

விளைவித்த விவசாயப் பொருட்களை ஒழுங்குமுறை விற்ப்பனை கூடம் சம்மந்தப்பட்ட விவசாயி வாசுதேவன் லட்சுமி தேவி தம்பதியினரிடம் முழுத்தொகையும் கொடுத்தப் பின்பே மக்காச் சோழப் பயிர்களை வெளியில் அனுப்ப வேண்டும் என்பது தான் அரசு விதி ஆனால் சட்டத்திற்க்கு புறம்பாக பணத்தை முழுவதும் கொடுக்காமல் மக்காச்சோழத்தை வெளியில் அனுப்பியது நடவடிக்கை உட்பட்ட செயலாகும் மேற்படி விருதுநகர் மாவட்ட ஒழுங்குமுறை விற்ப்பனை கூடத்தின் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் பலபுகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வாசுதேவன் லட்சுமி தேவி தம்பதியினர் விளைவித்த விவசாய பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையினை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே பல விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

பேட்டி.

1.லட்சுமி தேவி 2.வாசுதேவன்

இது குறித்து வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரியிடம் கேட்டபோது இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 டயாலிசிஸ் இயந்திரங்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 7 தளங்களைக் கொண்டு வெவ்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது

இதில் இதயவியல் மூளை நரம்பியல் பிளாஸ்டிக் சர்ஜரி உட்பட பல்வேறு நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள்

நான்காவது தளத்தில் சிறுநீரகவியல் துறை செயல்பட்டு வருகிறது இதில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் விதமாக டயாலிசிஸ் செய்வதற்கு ஆறு இயந்திரங்கள் இருந்தன தற்போது திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியினை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

அவரைத் தொடர்ந்து உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரத்த தானம் வழங்கியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

இதில் கடந்த ஓராண்டில் ரத்த தானம் செய்த நன்கொடையாளர்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் கேடயம் கொடுத்து வாழ்த்தினார்

மேலும் இதுவரை மொத்தம் 110 முறை ரத்ததானம் செய்த நாகராஜன் என்பவரை ஆட்சியர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டி சான்றிதழ்களையும் கேடயமும் வழங்கி கௌரவித்தார்

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்த்திகேயன் பேசும்போது

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இங்கு பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் தற்போது சிறுநீரகவியல் துறையில் 10 டயாலிசிஸ் மெஷினை வழங்கிய ரோட்டரி கிளப் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரத்ததானம் செய்து பறவைகளை காப்பாற்றி வரக்கூடிய நன்கொடையாளர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

நாங்குநேரி மாணவன் சின்னதுரை சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இந்த நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கும் போது உங்களைப் போன்ற பல ரத்ததான நன்கொடையாளர்கள் கொடுத்த ரத்த தானத்தினால் மாணவன் சின்னதுரைக்கு தரமான சிகிச்சை அளித்து அவனை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் கொடுக்கக்கூடிய இந்த ரத்த தானத்தினால் பல உயிர்களை காப்பாற்ற முடிகிறது சாதி மதம் இனம் பார்க்காமல் அனைவரும் ரத்ததானம் கொடுப்போம் என்று கூறிக்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் முதலையில் அனைவரும் ரத்ததான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

 

 

திருத்துறைப்பூண்டி நகராட்சி தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான இரண்டாம் இடம் தமிழக அரசால் பெற்றுள்ளது. மேலும் இந்த நகராட்சி முதன்மை நகராட்சியாக வரும் அளவிற்கு பணிகள் அனைத்தும் சிறப்போடு நடைபெற்று வருகிறது என திமுக நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பெருமிதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் பிரதான் பாபு,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர். எஸ். பாண்டியன், முன்னிலை வகித்தனர். தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தீண்டாமை உறுதிமொழி வாசித்து தீர்மானங்களை படித்தார்.

. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை குப்பைகள் அள்ளுவது சம்பந்தமான கருத்துக்கள் மேலும் பாலங்கள் கட்ட வேண்டும். தெருவிளக்கு சம்பந்தமான தேவைகள் அனைத்தையும் எடுத்து கூறினர்.

அப்போது திருத்துறைப்பூண்டி நகரத்தை இணைக்கும் முக்கிய பகுதியான ரவுண்டானா பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் எனவும். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்போது பேசிய நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் இதுவரை 128 பணிகளுக்கு ஒப்பந்த பள்ளி அறிவிக்கப்பட்டு ரூபாய் 59 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இதில் 97 பணிகளுக்கு ரூபாய் 24 கோடியே 27 லட்சம் பணம் அரசிடமிருந்து பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 27 பணிகளுக்கு 18 கோடி ரூபாய் அரசிடம் இருந்து பெற்று பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி பராமரிப்பில் உள்ள 32 குளங்களில் 8 குளங்கள் மேம்பாடு செய்யப்பட்டன 24 குளங்கள் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சிக்கு சொந்தமான மொத்தம் 48.50 கிலோமீட்டர் உள்ள சாலைகளில் 40 புள்ளி கிலோமீட்டர் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன

மேலும் குடிநீருக்காக ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் பகிர்மான குழாய் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. காய்கறி அங்காடி பணிகள் முடிவடைந்துள்ளது. புதிய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணி வணிக வளாகம் கட்டும் பணி என 17 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூபாய் ஒன்பது கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூபாய் இரண்டு புள்ளி 50 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது

எனவும் தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான இரண்டாம் இடம் தமிழக அரசால் பெற்றுள்ளது. மேலும் இந்த நகராட்சி முதன்மை நகராட்சியாக வரும் அளவிற்கு பணிகள் அனைத்தும் சிறப்போடு நடைபெற்று வருகிறது எனவும் மேலும் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருவாரூர் புறவழிச்சாலை பகுதியில் இருந்து மன்னார்குடி சாலை இணைக்கும் புறவழிச் சாலை மேலும் மன்னார்குடி சாலையில் இருந்து பட்டுக்கோட்டை சாலை இணைக்கும் புறவழிச் சாலை அமைக்க அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளோம். அந்தப் பணியும் விரைவில் துவங்கும் எனவும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தார்.

இறுதியாக சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)

குத்தாலத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்