in , , , ,

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (28.06.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (28.06.2024)

 

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் சுழற்சி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு.

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுழற்சி முறையில் கல்வி கற்பதை மீண்டும் கொண்டு வர வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் அடுத்த மேல் பாக்கத்தில் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் திண்டிவனம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டுகளில் காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் சுழற்சி முறையில் அக் கல்லூரியில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது 2024-25 ஆம் கல்வி ஆண்டில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என முழு நேரம் கல்லூரி செயல்படும் என அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி திறந்த போதே மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை சுழற்சி முறையை மாற்றாமல் முழு நேரம் கல்லூரி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட சென்ற மாணவர்களை போலீசார் மரித்து கல்லூரி உள்ளே மட்டும் போராட்டம் செய்ய அனுமதித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் வெயிலில் அமர்ந்து மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் கல்வி கற்க அனுமதி அளிக்க வேண்டும் என கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இப் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

 

 

ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி செய்வது குறித்து கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட அடியாமங்கலம் கிராமத்தில் இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் முடிவை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் அறிவிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பணிகளை தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டது.முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியை ஓஎன்ஜிசி அண்மையில் சுத்தம் செய்தது.தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி நீரியல் விரிசல் முறையை பயன்படுத்த முடியாது என்பதால் அந்த கிணறுகளில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட்டு,4 மாதங்களில் நிலத்தை சீர்செய்து,அதனை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிக்காக இடத்தை சுத்தம் செய்யும் போது, எரிவாயு குழாயில் லேசான சத்தத்துடன் எரிவாயு வெளியேறுவதால் உடனடியாக அந்த எரிவாயு கசிவை சரிசெய்ய 2 நாள் பணிக்கு அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தது.
2015-ஆம் ஆண்டு பணியின்போது அங்கு எரிவாயு கசிவு காரணமாக அருகாமையில் உள்ள பள்ளி மாணவிகள் மயக்கமடைந்த நிலையில், அப்போதே நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறிய ஓஎன்ஜிசி, தற்போது 9 ஆண்டுகளை கடந்த நிலையில் மீண்டும் அதே காரணத்தை கூறுவதால், ஓஎன்ஜிசி அங்கு துரப்பன பணிகளை தொடங்கவுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. ஓஎன்ஜிசி செயல்பாடுகளை கண்டித்து ஜூலை 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் யுரேகா தலைமையில், டிஎஸ்பி திருப்பதி முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், ஓஎன்ஜிசி தரப்பில் காரைக்கால் அசெட் உற்பத்தி பிரிவு மேலாளர் பி.என்.மாறன் தலைமையிலான ஓஎன்ஜிசி அலுவலர்களும், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்பினர்களும் கலந்துகொண்டு, தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தனர். முடிவில், சம்பந்தப்பட்ட கிணற்றை அதிகாரிகளின் முன்னிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் பார்வையிட்டு, அதில் திருப்திகரமான உடன்பாடு ஏற்பட்டால் ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு சீரமைப்புப் பணிகளை செய்ய அனுமதிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றது.

 

 

போலிஸ்காக போடாதிங்க உங்களுக்காக போடுங்கனு சொல்லி ஹெல்மெட் போட்டு வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தினம் தோறும் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலையில்லாமல் 365 நாட்களுக்கும் என சொல்லி, தஞ்சை நகர போக்குவரத்து காவலதுறையினர் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கூப்பனை வழங்கினார்கள்

ஹெல்மெட் அணிந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், தஞ்சையில் போக்குவரத்து காவல்துறையினர் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சை அண்ணா சாலையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அபாராதம் விதிப்பார்கள்.

ஆனால், இன்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை காவல்துறையினர் மறித்து நிறுத்தியதால் நாம் தான் ஹெல்மெட் போட்டு இருக்கோமே என எண்ணி ஒரு வித பதற்றமும் அச்சமும் அடைந்து வாகனத்தை நிறுத்தினர்.

அங்கு பேப்பர், பேனாவுடன் வந்த ஒரு பெண் வண்டி எண், பெயர் கேட்டு குறித்து கொண்டார்

குழப்பத்தின் உச்சத்திற்கே சென்ற வாகன ஓட்டிகளிடம் நீங்கள் ஹெல்மெட் அணிந்து வந்ததால் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலையில்லாமல் என கூறி கூப்பனை வழங்கிய காவல் துறையினர்

போலீஸ் காக போடாதீங்க உங்களுக்காக ஹெல்மெட் போடுங்கனு சொல்லி 365 நாட்களும் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலை இல்லாமல் வழங்கப்படும் என அறிவித்தனர்.

 

 

மாநகராட்சியில் நடைபெற்ற பணிகளில் முறைகேடுகள் இருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து 33 ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளதாக ஆணையர் தகவல். அது பற்றி தனக்கு தெரியாது என கூறிய மேயர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஊழல் செய்ததாக மேயர் கூறியதால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் – அமமுகவினர் வெளிநடப்பு. மாற்றத்தில் காரசார வாக்குவாதம்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் மற்றும் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து 33 ஆவணங்களை கேட்கப்பட்டுள்ளதாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஆணையர் பணிகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக 33 ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து மேயரிடம் கேட்டபோது, இது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரியாது என பதிலளித்தார். இதனால் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கும் – மேயருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயர் இராமநாதன் ஜெயலலிதா ஊழல் செய்யவில்லையா என ஒருமையில் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், தலைவர்களை ஒருமையில் பேச வேண்டாம், உங்கள் தலைவர் ஊழல் செய்யவில்லையா, நாங்கள் ஒருமையில் பேசுகிறோமா என கேள்வி எழுப்பி கூட்டத்தை விட்டு அதிமுகவினர், அம்முகவினர், பாஜகவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் வனத்துறைக்கு சொந்தமான நர்சரி தோட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் ஏர்கன் ஏர்பம்ப் உள்ளிட்டவைகளுடன் காரில் வேட்டையாட வந்த ஐந்து பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் வனத்துறைக்கு சொந்தமான நர்சரி தோட்டங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக காரில் வேட்டை துப்பாக்கியுடன் சிலர் சுற்றி திரிவதாக பொதுமக்கள் மற்றும் திருப்பனந்தாள் போலீசார் வனச்சரக அதிகாரிகளிடம் தகவல் அளித்ததன் அடிப்படையில் கும்பகோணம் வனச்சரக அலுவலர் உத்தரவுப்படி வனச்சரக பணியாளர்கள் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது காரின் ஏர்கன் மற்றும் ஏர் பம்ப் வேட்டை துப்பாக்கியுடன் வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (33) சரவணன் (25) செல்லக்கண்ணு (38) கணேசன் (30) சூரி (24) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் பறவைகளை வேட்டையாட வந்துள்ளதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட வனக்காவல் அலுவலர் உத்தரவிக்கிணங்க கலா 15 ஆயிரம் வீதம் ஐந்து பேருக்கும் 75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 

 

கருப்பு சட்டை அணிந்து மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அதிமுக உறுப்பினர்கள் கண்டன கோஷம் எழுப்பிய பாஜக மாமன்ற உறுப்பினர்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்தம் அவர்களின் தலைமையில் இந்த மாமன்ற கூட்டம் 3 மாதத்திற்கு பிறகு இன்று துவங்கிய நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வருகை புரிந்த நிலையில் மாமன்ற கூட்டத்தில் பாஜக வின் ஒரே மாமன்ற உறுப்பினர் பூமா கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சாவுக்கு மதுரை மாநகராட்சிக்கு மேயருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பிய நிலையில் இதில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடைய சிறு சலசலப்பு ஏற்பட்டது பாஜக மாமன்ற உறுப்பினர் பூமாதேவி வெளிநடப்பு செய்தார் இதனால் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பின்னர் அனைத்து தீர்மானங்களில் நிறைவேற்றப்பட்டனர்


Watch – YouTube Click

What do you think?

இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 28.06.2024| Today Weather News

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்