இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (02.07.2024) – 02
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை – பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற நில அளவையர் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல் மேற்கு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது கையும் கழுவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பிடித்துள்ளனர். மேலும், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனிபட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள
மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் பணிபுரியும் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து தனிபட்டாவிற்காக பாக்கியராஜ் அவரது தனிப்பட்ட உதவியாளர் சதீஷ் மூலமாக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக பின் கடைசியாக ரூ.15 ஆயிரம் இறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து கணேஷ் குமார் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் லட்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் லட்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் கலந்த பணத்தினை கணேஷ் குமாரிடம் கொடுத்து சர்வேயர் பாக்கியராஜ் உதவியாளர் சதீஷ் (தனிப்பட்ட) இடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளனர்.
இதன் படி கணேஷ்குமார் பணத்தை சர்வேயர் பாக்கியராஜ் உதவியாளர் (தனிப்பட்ட) சதீஷ் இடம் கொடுக்கும் பொழுது அவரை கையும் கழுவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை தொடர்ந்து பாக்கியராஜ்-யை பிடித்துள்ளனர். மேலும், நில அளவை அலுவலகத்தை முழுமையாக சோதனை செய்து சர்வேயர் பாக்கியராஜ் மற்றும் உதவியாளர் (தனிப்பட்ட) சதீஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்கினால் தான் நல்ல மருத்துவர்கள் வர முடியும் நீட் தேர்வு தமிழ்நாட்டின் மருத்துவ பரிணாம வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கிறது என்றும் இந்தியாவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவர் கலைஞர் என நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 54- வது பட்டமளிப்பு விழா மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2018- ம் ஆண்டு சேர்ந்து படித்து முடித்த 154 மருத்துவ மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக அவர் பட்டமளிப்பு விழாப் பேரூரையாற்றிப் பேசுகையில் முதன் முதலில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தது தமிழ்நாடு தான் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் வட மாநிலத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்ததன் மூலம் நீட் தேர்வு எந்தளவுக்கு மோசடியானது என்பதை உணர வேண்டும்.
12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்கினால் தான் நல்ல மருத்துவர்கள் வர முடியும் நீட் தேர்வு தமிழ்நாட்டின் மருத்துவ பரிணாம வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கிறது அதை நீங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும். குஜராத், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தால் விலைக்கு விற்கப்படுகிறது. கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவர்கள், செவிலயர்கள் கடை நிலை ஊழியர்கள் என முழு அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றினர். இந்த உணர்வை தனியார் மருத்துவமனையில் பார்க்கமுடியவில்லை. இந்தியாவிலேயே மருத்துவத்துறையல் சிறந்து விளக்கும் மாநிலம் தமிழகம்தான் இதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்தான் அவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை மருத்துவமனை அமைய வேண்டும் எண்ணி அதற்கு அடித்தளம்மிட்டவர். இன்று தமிழகத்தில் 74 மருத்துவக்கல்லூரிகள் உள்ளது இதனால் ஆண்டுக்கு 11,650 மாணவ மாணவிகள் மருத்துவர்களாக உருவாகின்றனர். குஜராத், உத்திரபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவு , எனவே நமது வாய்ப்பை பறிக்கு வகையிலேயே ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கையில் மக்கள்தொகை அடிப்படையில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒதுக்கப்படும் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என கொண்டுவரப்படுகிறாது. புதிய கல்விக் கொள்கை தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டாலும் புதிய கல்விக் கொள்கை வந்தால் தமிழகத்தில் 3650 மாணவர்களின் மருத்துவ படிப்பு பறிக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப் ரூபி மனோகரன் துணை மேயர் ராஜு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா மற்றும் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் பேராசிரியர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திருவண்ணாமலையில் வட்டார அளவில் நடைபெறும் முதல் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம்……..
விவசாயிகள் திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு……
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வாரத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயி குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலை தாலுகாவில் திருவண்ணாமலை மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளும் தாலுக்கா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு பிறகு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு விவசாயிகள் வந்திருந்த நிலையில் துரிஞ்சாபுரம் B.D.O உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் வராததால் விவசாயிகள் ஆத்திரமடைந்து திடீரென விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் கோமா நிலைமைக்கு சென்று விட்டதாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் துரிஞ்சாபுரம் BDO-வை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் திடீரென திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து தீ குளிக்க போவதாக கூறி வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்தனர்.
இதனை கவனித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பெட்ரோலை பறிமுதல் செய்து கீழே ஊற்றினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.