மின்சார வாரியம் நிர்வாக சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது, ஒரு யூனிட் மின்சாரம் தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் பொழுது மூன்று ரூபாய் 40 காசுக்கு செலவாகும் நிலையில் தனியாரிடம் 12 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் மாநில செயலாளர் மயிலாடுதுறையில் நடைபெற்ற சங்க கூட்டத்திற்கு பின் பேட்டி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் TNEB எம்ப்ளாயீஸ் பெடரேஷன் அமைப்பின் விரிவடைந்த நாகை கிளையின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த பின்பு சங்கத்தின் மாநில செயலாளர் கே செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கும்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அமைச்சர் இல்லாமல் மிகப் பெரிய நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மயிலாடுதுறை நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்படும் ஆனால் இதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் மின்சார வாரியம் இதுவரை மேற்கொள்ளவில்லை. 500 ஒப்பந்த பணியாளர்கள் மூலம் தினக்கூலி அடிப்படையில் மரக்கிளைகளை சீர் செய்தால் வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும். தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட்டிற்கு மூன்று ரூபாய் நாற்பது பைசா செலவாகிறது ஆனால் கமிஷன் வேண்டும் என்பதற்காக தனியாரிடம் 12 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது இதன் காரணமாகவே மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. புதிய மின் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தாமல் அனைத்தையும் தனியாரிடம் கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும். மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் அதானி இடம் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த ஒப்பந்தம் போடப் போவதாக செய்திகள் வெளியாகின்றது இதனால் தமிழ்நாட்டுக்கோ தமிழக மக்களுக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை இதனை தமிழக அரசே மேற்கொள்ள வேண்டும் மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.