in

தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேட்டி


Watch – YouTube Click

கரூர் அருகே தவறான தகவல்களை கொடுத்து அனுமதி பெற்றுள்ள 2 கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சமூக செயல்பாட்டாளர் முகிலன் பேட்டி.

கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த குப்பம் கிராமத்தில் கிரசர் மேடு என்ற இடத்தில் என்.டி சி எனும் பெயரில் 2 கல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற பல்வேறு தவறான தகவல்களை கொடுத்து அனுமதி பெற்றுள்ளனர்.

சுமார் 80 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பு நிலையம் உள்ளது அதன் அருகிலேயே கல் குவார் அமைக்கப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் சமூக செயல்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், கரூர் மாவட்டம் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள சூழ்நிலையிலும் என்.டி.சி கல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த கல்குவாரி அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமியின் கல்குவாரி என்று சொல்லப்படுகிறது.

மாநில சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு குழுவிற்கும், கனிம வளத்துறை அமைச்சர் துரை முருகனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் 350 கோடி மதிப்பீட்டில் 756 கிராமங்களுக்கு செல்லும் தண்ணீர் சேமிப்பு தொட்டியை முதல்வர் திறந்து வைத்த அதே நேரத்தில் இந்த கல் குவாரிகளுக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் அளிக்கிறது.

அதனால் போர்கால அடிப்படையில் இந்த குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அனுமதி காலம் முடிந்தும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட முழுக்க உள்ள 300க்கும் மேற்பட்ட கல் குவாரிகளுக்கு சட்டப்படி கம்பி வேலி அமைக்காமல் இருக்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


Watch – YouTube Click

What do you think?

தீயணைப்பு செயல்முறையில் எரிவாயு வெளியேறி அதிகாரிகளின் முகத்தில் பட்டதால் பரபரப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு – மாநில அளவில் திருச்சி மாவட்டம் ஐந்தாவது இடம்