in

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்ப்பாட்டம்

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையுடன் சிறப்பு தலைவர்கள் பன்னீர்செல்வம் அழகர்சாமி குருசாமி ஆவியூர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் பொன் அமைதி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடும்ப அட்டைதாரர் விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதத்திலிருந்து 90% உயர்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40% ரேகை பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் இணையதள சேவையினை மேம்படுத்த வேண்டும் என்றும், பொது விநியோகத் திட்டத்துக்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், அத்தியவசியமான பொருள்கள் அனைத்தும் சரியான நிலையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்றும், கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துறை சார்ந்த அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையம் ஒன்றிய செயலாளர் இந்திரா பிரகாஷ் பங்கேற்று நன்றி உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசனம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி

OTT Summer கொண்டாட்டம்