in

தமிழக அரசு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி

மருத்துவரை கொலை முயற்சி செய்தவரை கண்டித்து அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ஆனால் அன்றாடம் வியாபாரிகளிடம் மாமுல் கேட்டு வெட்ட படுகொலை சம்பவங்கள் நிகழ்கின்றன அதற்கு தமிழக அரசு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி

தமிழ்நாட்டில் பெட்டிக்கடைகளில் கூல் லிப், புகையிலை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கொள்கையை மாற்றி விற்பனை செய்வதற்கு அனுமதி தர வேண்டும் – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் முத்துக்குமார் அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் மதுரை மண்டல பொதுக்கூட்டம் தமிழ்நாடு பழைய இரும்பு மொத்த வியாபாரிகள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வாடகைக்கு கடை நடத்துபவர்களுக்கு GST வரிவிதிப்பு என்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஆன்லைன் வர்த்தகம் அந்நிய முதலீடுகளை வளர்ப்பதற்கு அதிகாரிகள் தவறான கொள்கையை அரசாங்கத்திடம் தெரிவித்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி எதிர்த்து உணவுப்பொருள் சர்வீஸ்செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி தரக்கூடாது என்று கொள்கை இருக்கிறது.

டிசம்பர் 9ஆம் தேதி மாநில பொதுக்குழு கூட்டம் கோயமுத்தூரில் நடைபெறுகிறது அதில் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியாகும்.

கழிவு இரும்பு பொருள்களுக்கு 18 , 20 சதவீதம் வரி என்பது ஏற்க முடியாத ஒன்று வரி என்பது 2 சதவிதம் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை குறைப்போம் மாற்றி கொடுக்க அளவிடுவோம் என்று சொன்னார்கள் அது எதுவும் செய்யாமல் மின்கட்டணத்தை மூன்று தடவை உயர்த்தி உள்ளனர்.

திருச்சியில் இருந்து கரூருக்கு செல்கின்ற வாகனங்களுக்கு சுங்கசாவடியில் ஒரு அடி பாதையில் கூட வரி வாங்குகிறார்கள்.
மத்திய அரசு சுயதொழில் செய்பவர்களை கொத்தடிமையாக வைத்து இருக்கிறது.

கூலி லிப், கணேஷ் புகையிலையை பெட்டி கடையில் விற்பதற்கு சங்கத்தின் சார்பில் விற்க கூடாது என்று அறிவிப்பீர்களா என்ற கேள்விக்கு

கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடை செய்ய வேண்டும், போதை பொருள் கடத்துவர்கள் எல்லாம் தொழில் அதிபர்களாக மாறிவிடுகிறன்றனர்

ஒரு சிலர் கடையில் கணேஷ் புகையிலை விற்றால் அதிகாரிகள் கடையை பூட்டி 50 ஆயிரம் அபதாரம் விதிக்கின்றனர்.

கணேஷ் புகையிலை எல்லா மாநிலத்திலும் விற்கின்றனர் கோடி கணக்கில் GST செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 5 ரூபாக்கு வாங்கி 50 ரூபாய்க்கு திருட்டு தனமாக விற்பனை செய்கின்றனர்.

கணேஷ் புகையிலை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். கணேஷ் புகையிலை கூல் லிப் போன்ற பொருளை விற்பனை செய்ய கூடாது என்று செல்வதை தமிழக அரசு கொள்கையை கைவிட வேண்டும்.

10 ரூபாக்கு மதுபாட்டில் வாங்கி 150 ரூபாய்க்கு மதுபாட்டிலை அரசாங்கம் விற்பனை செய்கின்றனர். கஞ்சா அபின் போன்ற போதை பொருட்களை அரசு அதிகாரிகள் தடை பண்ண வேண்டும்.

கணேஷ் புகையிலை தடை செய்து எங்களை திருடனாக்க வேண்டாம். கேரளா ஆந்திரா மாநிலத்தில் கூல் லிப் கணேஷ் புகையிலை பாக்கெட் வைப்பதற்கு அங்குள்ள அரசு அனுமதி தந்திருக்கிறது அதேபோல் தமிழகத்திற்கு கூலிப் கணேஷ் புகையிலை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கொள்கையை மாற்ற வேண்டும்

கூலிப் கணேஷ் புகையிலை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை செய்து இருக்கிறது ஆகையால் நாங்கள் யாரும் பெட்டிக்கடையில் கணேஷ் புகையிலை விற்கவில்லை. மறைத்து வைப்பதால் தான் அதிகமானோர் அதை தேடி செல்கின்றனர்.மருத்துவரை கொலை முயற்சி செய்தவரை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .
வியாபாரிகளிடம் மாமுல் கேட்டு வெட்ட படுகொலை செய்கின்றன ஆனால் தமிழக அரசு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

What do you think?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் களத்தில் இறங்கிய தாவேக

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 16.11.2024