புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க சாலையோரத்தில் வைத்திருந்த பேனரை அதிகாரிகள் அகற்ற கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகாவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் அவ்வப்போது தலைவர்களின் பிறந்த நாட்களில் தடையை மீறி பேனர்கள் வைப்பது வழக்கம்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி முழுவதும் விளம்பர பேனர்களை வைக்கப்பட்டது இதனையடுத்து தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார் மேலும் அவரை வரவேற்க புதுச்சேரி மாநில எல்லைகளில் வளைவு வடிவில் விளம்பர பேனர்களை திமுகாவினர் வைத்து இருந்தனர் மேலும் அனுமதி இன்றி தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகாவினர் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் திமுகாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.