in

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

 

கும்பகோணம் கோவிலாச்சேரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் அருகே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் மீதான மரியாதை, அவர்களின் உரிமைகள், அவர்களின் சாதனைகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மக்கள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை தஞ்சை மாவட்ட திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை மாஸ் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் நட்புறவு நல சங்கம் சார்பில் கோவிலாச்சேரி அருகில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜி, கே எஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் செல்வராஜ், நட்புறவு நல சங்க பொறுப்பாளர் மூர்த்தி, மாஸ் கல்லூரி முதல்வர் சரவணன், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மூன்று கிலோமீட்டர் வரை ஓடினார்கள். இதில் முதலாவதாக அரசு பொறியியல் கல்லூரி சேர்ந்த சன்மதி, இரண்டாவதாக அரசு பொறியியல் கல்லூரி மாணவி தர்ஷினி, மூன்றாவதாக மாஸ் கலை அறிவியல் கல்லூரி லிஷா மெர்லின் மூன்று பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

What do you think?

மகளிர் தின சிறப்பு சலுகை ஒரு ரூபாய்க்கு அமுல் ஐஸ்கிரீம்

சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா