தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் நாள்தோறும் இங்கு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரத்த சேமிப்பு வங்கி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரத்த சேமிப்பு வங்கி கட்டப்பட்டது இதனை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் பெரும்பாலும் ஏழை எளிய தினக்கூலி மக்களாக இருக்கின்றனர்.
அவசர ரத்த தேவை ஏற்படும் போது திருத்துறைப்பூண்டியில் ரத்தத்தை சேகரித்து சுத்திகரித்து ரத்தத்தை பாதுகாக்கும் வசதி திருத்துறைப்பூண்டியில் ஏற்படுத்தும் விதமாக இரத்த வங்கி திறக்ககோரி பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
இரத்தகொடை அளிக்க முன்வரும் இரத்த கொடையாளர்கள் 28 கிமீ தொலைவில் அமைத்துள்ள திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று தான் இரத்த கொடை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் தினக்கூலிகளாக உள்ள இரத்தகொடையளர்கள் வருமான இழப்பை சந்திக்க நேரிடுகிறது.
இதனால் குருதி கொடையாளர்கள் இரத்தம் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர் மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி சென்று இரத்த கொடை கொடுத்து தேவையுடைய இரத்தத்தை கையோடு பெற்றுக்கொண்டு திரும்ப திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு வந்து தந்த பிறகு நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்படுவதால் நோயாளிகளின் உறவினர்களுக்கும், நோயாளிகளுக்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட ரத்த சேமிப்பு வங்கி இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் எந்த பலனும் இன்றி இருந்து வருகிறது.
எனவே திறக்கப்பட்டு செயல்படாமல் பெயரளவில் இருந்து வரும் இரத்த சேமிப்பு வங்கியை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வரும் 26 ம் தேதி சனிக்கிழமை திருத்துறைப் பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட தலைவர் யாசர் அராபத் தெரிவித்துள்ளார்.