தமிழக அளவிலான,13-வயதிற்கு உட்பட்டோருக்கான பேட்மிட்டன் போட்டி 400 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெறும் இந்த போட்டி 5 நாட்கள் நடைபெறுகிறது.இந்த போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில், தமிழக அளவில், 13 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கு, பேட்மிட்டன் போட்டி இன்று துவங்கியது இந்த நிகழ்வுக்கு தமிழக பேட்மிட்டன் அசோசிசன் செயலாளர் முகம்மது அர்ஷத் தலைமை தாங்கினார். ARC ஆனந்த் முன்னிலை வசித்தார்.
இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் வந்து கலந்து கொண்ட 400 க்கு, மேற்பட்ட இறகு பந்து போட்டியாளர்களின் – போட்டிகள் இன்றிலிருந்து வரும் 24/9/24 வரை நடைபெறுகிறது.இந்த இறகு பந்து போட்டியை துவக்கி வைத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசும்போது – தமிழகத்தில் கடைசி மாவட்டமாக உருவாக்க பட்ட மயிலாடுதுறை மாவட்டம், இன்று, விளையாட்டு துறையில் தமிழகத்தில் 18-வது இடத்தை பிடித்துள்ளது..
மற்ற மாவட்டங்களில் அரசு சொந்தமான இடங்கள் அதிக அளவில் உள்ளது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் எல்லா இடமும் விவசாய நிலங்களாவும், தனியாருக்கு சொந்தமானதுமாக இருக்கிறது. அதனால், விளையாட்டுக்கான இடத்தை மேம்படுத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது என்றார். இந்த மாநில அளவிலான இறகு பந்து (பேட்மிட்டன்) விளையாட்டு தொடக்க நிகழ்வுக்கு தமிழக பேட்மிட்டன் அசோசிசனோடு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பெருமளவில் பங்கேற்று,நிகழ்ச்சிகளை சிறப்புற செய்தனர்.