in

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்

பிற துறை பணிகளை கவனிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்காமல் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பணிசுமை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும், வேளாண் துறை சார்பில் நடைபெறும் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு உபகரணங்களை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிற துறை சார்ந்த பணிகளை வழங்குவதால் பனிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், வேளாண்துறை சார்பில் நடைபெற வேண்டிய டிஜிட்டல் கிராப் பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பிற மாநிலங்களில் இதற்காக கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்துள்ள நிலையில், டிஜிட்டல் கிராப் சர்வேக்கு தேவையான உபகரணங்கள் எதையும் வழங்கவில்லை என்றும், உடனடியாக தமிழக அரசு கூடுதல் பணியாளர்களை நியமித்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை சங்கு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்

What do you think?

பாரத பிரதமர் நரேந்திர மோடியின்.ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளுக்கு செல்லும் சாலையை அடைத்து ஆக்கிரமித்த நபர்கள், ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை