in

வெள்ளி விழா கண்ட தமிழகத்தின் முதல் உழவர் சந்தை

வெள்ளி விழா கண்ட தமிழகத்தின் முதல் உழவர் சந்தை – விவசாயிகளுக்கு சால்வை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் – 25 ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 1999 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தையாக மதுரை அண்ணா நகர் உழவர் சந்தையை திறந்து வைத்தார்.

உழவர் சந்தையானது கடந்த 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது

அன்று ஆரம்பித்த போது என்ன பரபரப்பும் சுறுசுறுப்பும் விற்பனையும் இருந்ததோ அதே சுறுசுறுப்புடன் விற்பனையுடன் மக்கள் பேராதரவுடன் இன்றும் இயங்கி வருகிறது.

விவசாயிகளின் நண்பனாகவும், பொதுமக்களின் நலனின் அக்கறை கொண்ட தலைவராகவும் இருந்த கலைஞர் அவர்களால் முத்தான திட்டமான உழவர் சந்தை திட்டம் என்பது மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது

இந்த உழவர் சந்தை மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நல்ல ஒரு நட்பு பாலத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்

இதன் மூலம் விவசாயிகளுக்கு விளைப் பொருளுக்கு நியாயமான விலையும், பொதுமக்களுக்கும் மலிவு விலையிலும் அனைத்து காய்கறிகளும் கிடைகின்றன.

இத்தகைய உழவர் சந்தை 25 ஆம் ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு இன்றைய தினம் அண்ணா நகர் உழவர் சந்தையில் வேளாண் விற்பனை வணிக துணை இயக்குனர் மற்றும் முன்னாள் வேளாண் விற்பனை வாரிய தலைவர் அக்ரி. கணேசன் ஆகியோர், உழவர் சந்தையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறிகளை விற்பனை செய்து வரும் விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

தொடர்ந்து உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

மேலும் கலைஞர் அவர்கள் உழவர் சந்தையை தொடங்கி வைத்தது முதல் இன்று வரை 25 ஆண்டுகளாக விற்பனை செய்யும் விவசாயிகள் பலர் இன்றும் இங்கு வணிகம் செய்து வருகின்றனர்

மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பல விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை நேரடியாக இங்கே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்

இது மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிகளையும் நேரடியாக விவசாயிகள் இங்கே கொண்டு வந்து பொதுமக்களிடையே விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு மொத்தம் 130 கடைகள் உள்ளது, 110 கடைகள் வரை தினமும் செயல்படும் விடுமுறை நாட்கள் வார நாட்களில் மட்டும் அனைத்து கடைகளும் செயல்படும்

தினமும் 15,000 கிலோ காய்கறிகள் விற்பனை ஆகிறது

8 லட்சம் வரை தினமும் விற்பனை நடக்கின்றது

சனி, ஞாயிறு 19 ஆயிரம் கிலோ காய்கறி விற்பனையும்
10 லட்சம் ரூபாய் விற்பனை நடக்கும்

நாள் ஒன்றுக்கு 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேசியதாவது

கலைஞர் அவர்களால் கடந்த 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த உழவர் சந்தையானது இன்று வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதன் மூலம் விவசாயிகளாகிய எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கின்றது

பொது மக்களுக்கும் நல்ல தரமான காய்கறிகள் மலிவு விலையில் கிடைக்கின்றது இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்

இந்த உழவர் சந்தையால் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரத்தை கலைஞர் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார் என்கின்றனர்.

சென்ட்ரல் மார்க்கெட்டை விட உழவர் சந்தை என்பது காய்கறிகள் விலை மிகவும் மலிவாக உள்ளது

வீட்டுக்கு அருகே நடக்கும் தூரத்தில் இருப்பதினால் பல வருடங்களாக இங்கே காய்கறிகள் வாங்கி வருவதாகவும், வீட்டுக்கு உபயோகத்திற்கு மட்டுமல்லாது எங்கள் குடும்பத்தில் திருமணம் வளைகாப்பு உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் மொத்தமாகவும் இங்கே காய்கறிகளை நாங்கள் வாங்குவோம்
இங்கே உள்ள வியாபாரிகள் அனைவரும் நண்பர்களைப் போல பழகி இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

What do you think?

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அரசாங்கம் வீடு கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம், ஏழை மக்கள் வீடு கட்டினால் ஏற்றுக் கொள்ளக் கூடாதா?

மதுரை தே. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமை வலுப்படுத்தும் வகையில் முத்தாலம்மன் கோவில் சப்பர திருவிழா