தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் மீது பெரும் சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி உள்ளதாகவும், குறிப்பாக பால் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, குப்பை வரி,குடிநீர் கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என்று கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும்,
இந்த சூழலில் மீண்டும் மின்சார கட்டண உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள், தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், எனவே தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,
தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கும் மின் கொள்முதலை குறைத்து, தமிழக அரசு தன் மாநில சுய தேவைக்கு தேவையான மின் உற்பத்தியை பெருக்கி மின்சார உற்பத்திக் கழகம் லாபத்தில் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மனு அளித்தனர்.