தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பேட்டி
ராமேஸ்வரம் பகுதி சேர்ந்த மீனவர்கள் 20 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீண்டும் மீண்டும் மீனவர் சமுதாயத்திடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இது போன்ற நிலை தொடரக்கூடாது. இலங்கை அரசின் தவறான போக்கு கண்டிக்கத்தக்கது. வெளியுறவுத்துறை இலங்கை அரசோடு உடனடியாக அழுத்தமான முறையில் பேசி இது போன்ற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீட் தேர்வை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்கள் சில வருடங்களாக பல்வேறு மாநிலங்களுக்கு சவால் விடும் வகையில் தமது அறிவு கூர்மையால் பரீட்சையில் வெல்லக்கூடிய நிலை, மதிப்பெண் எடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் சில தவறுகள் நடைபெற்றுள்ளது அந்த துறை அமைச்சர் வெளிப்பட தன்மையோடு வருங்கால கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என இதனை ஏற்றுக் கொண்டு எந்த ஒரு தேர்விலும் இதுபோன்ற நிலை நடந்து விடக்கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும் மத்திய அரசு இதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கான முழு ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரு கோடி ரூபாய் அபராதம் கூட அபராதம் கட்டக்கூடிய நிலை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது துரதிஷ்டமாக தமிழகத்தில் திமுகவால் தொடங்கி மத்தியில் உள்ள காங்கிரஸ் இந்திய கூட்டணி எல்லாம் கல்வித்துறையில் அரசியலைப் புகழ்த்தி மாணவர்களையும் பெற்றோர்களையும் குலப்ப நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. நாளைய தினத்திலிருந்து பாராளுமன்றதிலும் நீட் தேர்வு கூடாது என முடக்கக்கூடிய நிலை ஏற்படும் இது வருங்கால மாணவர்களுக்கு செய்யக்கூடிய நல்லதல்ல.
கள்ளக்குறிச்சி சம்பவம் திருந்த வருத்தத்தையும் வேதனையும் ஏற்படுத்திருக்கிறது நடந்து முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கூட 55 உயிர் பலிக்கு கூட முதல்வர் இன்னும் கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆறுதல் கூறி பதற்றத்தை குறைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசை பொருத்தவரை கள்ள சாராயத்தை தடுப்பதை அவர்கள் நிறுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இனிமேலாவது கள்ளச்சாராயத்திற்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசின் எந்த ஒரு விசாரணையும் மக்கள் ஏற்க தயாராக இல்லை சிபிஐ விசாரணை தான் இதுக்கு முடிவு கொடுக்கும் என்று முழுமையாக நம்புகிறார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவையில்லை.