பாராளுமன்ற தேர்தலில் நிற்பதற்கு விருப்பம் மக்களோடு மக்களால் இருப்பேன் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரியில் அதிகரித்து வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். மறுவாழ்வு போதை பழக்கத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், போதை மறுவாழ்வு இல்லத்தை அதிகப்படுத்த வேண்டும், 24 மணி நேரமும் தொலைபேசியில் கவுன்சிலிங் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது,
மக்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ராஜ் நிவாஸிலிருந்து whatsapp குழு உருவாக்கப்படுகிறது.
7339555225 என்ற என்னை தொடர்பு கொண்டு தங்களுடைய கருத்துக்களையும் புகார்களையும் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
போதைப் பழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் புதுச்சேரியை பாதுகாப்பாக இருப்பதற்கு அத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று சிறுமி தாயையும், தந்தையையும் தேசிய பட்டியலின ஆணையத்தின் அதிகாரிகள் சென்று பார்த்திருக்கிறார்கள் அதன் மூலம் அவர்களுக்கு பொருள் உதவி செய்திருக்கிறார்கள்.
அந்த ஆணையத்தின் விருப்பம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசாங்க வேலை கொடுக்க வேண்டும் என்பதினால் அவர்கள் முதலமைச்சரையும் பார்த்து அவங்களுக்காக அம்மாவுக்கும் அப்பாவுக்கு ஒருவருக்கு அரசாங்க வேலை கொடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முதல் பகுதி பண உதவி செய்திருக்கிறார்கள் அதற்கு இரண்டாவது பணமும் உதவி செய்ய இருக்கிறார்கள் ஆக அரசாங்கம் எல்லா விதத்திலும் மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி அவர்கள் உறுதுணையாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்….
ஆளுநர் மாளிகை ஏன் எதிர்கட்சிகள் முற்றுகை இடுகிறீர்கள் எல்லாம் நேர்மையாக நடைபெற்று இருக்கும் பொழுது ஏன் ஆளுநர் மாளிகை முற்றுகிட வேண்டும்.. விசாரணை விரைவு படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, விரைவு நீதிமன்றம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது… போதை தடுப்பை இரும்பு கரம் கொண்டு தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்க வேண்டும்
புதுச்சேரியில் மது வருவாயை தாண்டி நல்ல வருவாய் ஏற்படுத்துவதற்கு தான் முயற்சி செய்து வருகிறோம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறோம்..
போதை பொருள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகத்துல எல்லா இடத்திலும் போதை பொருள் இருக்கு அது மக்களுக்கு அதிகார ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக காலையில் கூட்டம், உணர்வு ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மாலை கூட்டம் இது மக்கள் இயக்கம் அது அதிகாரிகளின் இயக்கம்…
போதைப்பழக்கம் இங்கு மட்டும் இல்லை உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது, நமது குழந்தைகளின் பாதிக்க கூடாது என்பதற்காக தான் தாய் உள்ளத்தோடு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் நிற்பதற்கு விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு மக்களோடு மக்களால் இருப்பேன் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் தேர்தலின் நிற்பது எனக்கு விருப்பம் தான்….
தேர்தலில் நிற்பது குறித்து செய்தியாளருக்கு சொல்லாமல் இருக்க மாட்டேன் அது மோடி கேரன்டி போல் இது லேடி கேரன்டி என சிரித்தபடியே புறப்பட்டு சென்றார்..