தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடி தமிழக அரசிடம் உள்ளது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தகவல்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் திருமண மஹாலில் ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது….
தமிழக பள்ளி கல்வி துறை கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 243 என்பது தொடக்க கல்வி துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடைய பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கக்கூடிதாக இருக்கின்றது.
தொடக்கல்வி ஆசிரியர்களை பாதிக்க கூடிய அரசாணையாக 243 இருப்பதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
ஆனால் தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தையும், தேசிய ஓய்வூதிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. சிபிஎஸ் என்று சொல்லக் கூடிய எந்தவித ஓய்வூதியமும் வழங்கப்பபடாது திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.70 ஆயிரம் கோடி இன்றைக்கு தமிழக அரசின் கைவசம் இருக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட நாளாக போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தொடக்கக்கல்வியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.
இதுபோன்ற 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பினர் சென்னையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளது. தமிழக அரசு எங்களுடைய கோரிக்கைளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.