பா ஜ க ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து தமிழக பாஜக தலைவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை உறுதியாக வலிமையாக இந்தியா கூட்டணி இருக்கின்றது
நாட்டில் ஆர்எஸ்எஸ் பிஜேபி என்ற மிகப்பெரிய இருள் சூழ்ந்து இருக்கின்றது அவர்கள் இந்தியாவையே விழுங்குவதற்கு காத்திருக்கின்றனர்-நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பு கிராம காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திருநெல்வேலி மாவட்டம் அரியகுளம் பகுதியில் இன்று நடைபெற்றது.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் அடையாள அட்டை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை உறுதியாக வலிமையாக இந்தியா கூட்டணி இருக்கின்றது. ஒரு நாட்டுத் தலைவருக்கு இன்னொரு நாட்டு பிரதமர் ஓட்டு கேட்டது இந்திய பிரதமர் தான். இந்தியர்கள் கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து பிரதமர் இதுவரை வாயை திறக்கவில்லை, ஒரு பதிவு கூட தரவில்லை.
அங்கு சென்றது நிலுவையில் உள்ள அதானி வழக்குகளுக்காக. அவருக்கு இந்திய தேசத்தை விட அதானி மீதான வழக்குகளே முக்கியமாக இருக்கின்றது. பாஜக ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பா ஜ க ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து தமிழக பாஜக தலைவர்கள் என்ன சொல்ல போகிறார்கள். மோடி சொன்னது போல் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழித்து விட முடியாது என்றைக்கும் காங்கிரஸ் கட்சி நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.