in

தாமிரபரணி ஆறு தொடங்கும் இடத்தில் இருந்து ஆற்றை சுத்தம் செய்ய விரைவில் அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் பேட்டி.

தாமிரபரணி ஆறு தொடங்கும் இடத்தில் இருந்து ஆற்றை சுத்தம் செய்ய விரைவில் அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் நிறுவங்கள் மூலம் ஆற்றில் உள்ள புராதான மண்டபங்கள் கரைகளை பராமரிக்க ஏற்பாடுகள் செய்ய இருப்பதாக நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் பேட்டி.

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மண்டல துணை இஎஸ்ஐ மருத்துவமனையை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம்,உள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார் பின்னர் மருத்துவமனையில் செய்யப்பட வேண்டிய பணி மருத்துவமனையில் உட்கட்டமைப்பை உயர்த்துவது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தமிழகத்தில் உள்ள மூன்று இ எஸ் ஐ மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் நெல்லை இ எஸ் ஐ மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டோம்.

மருத்துவமனை சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது நோயாளிகளிடமும் குறைகள் கேட்டறியப்பட்டது. திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு 100 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.தற்போது செயல்பட்டு வரும் மருத்துவமனையை 300 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே அனைத்து அதிநவீன சிகிச்சைகளும் நோயாளிகள் எளிதில் பெற வசதியாக இருக்கும்.

சிடி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் கிடைக்க பெறும் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது செயல்பட்டு வரும் மருத்துவமனையை கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.தாமிரபரணி நதி தொடங்கும் இடத்திலிருந்து தாமிரபரணி பாய்ந்து ஓடும் இடங்களை சுத்தம் செய்து நதியை பாதுகாக்க விரைவில் அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் தாமிரபரணி நதிக்கரைகளில் அமைந்துள்ள புராதான மண்டபங்கள் தாமிரபரணி கரைகளை பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவன நிதிகளை பெற்று பணிகள் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் மத்திய ஜல் சக்தி துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தாமிரபரணி நதியை கங்கை போன்று தூய்மைப்படுத்துவதகான பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

What do you think?

பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயிலின் நாகர் சன்னதியில், சிறிதும் கலையாமல் சட்டையை உரித்து வைத்து சென்ற நல்ல பாம்பு.

ஊட்டச்சத்து மாதவிழாவில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்த விழிப்புணர்வு