in

தங்கலான்…..உணர்வின் பிழம்பு …. இப்படியும் விக்ரமால் நடிக்க முடியுமா


Watch – YouTube Click

தங்கலான்…..உணர்வின் பிழம்பு …. இப்படியும் விக்ரமால் நடிக்க முடியுமா

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான்
படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 266.44 கோடி வசூல் செய்திருக்கிறது.

இதுவரை தங்கலான் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான ரிசல்ட்டை கொடுத்த நிலையில் நிச்சயம் தங்களான் படத்திற்காக மட்டுமல்ல விக்ரமின் கடின உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. விக்ரம் தன் குடும்பத்துடன் விவசாயம் செய்து தன் மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த ஊரின் ஜமீன்தார் அவர்களுடைய நிலத்தை சூழ்ச்சி செய்து அபகரித்து விடுகிறார். அப்பொழுது கோலார் பகுதியில் இருக்கும் தங்கத்தை எடுப்பதற்காக Clamin (க்லெமன்) என்ற வெள்ளைக்காரர் விக்ரம் மற்றும் அவரது கிராமத்தினரை உதவிக்கு அழைக்கிறார்.

விக்ரமும் இதற்கு சம்மதித்து அந்த வெள்ளைக்காரருடன் சுரங்கத்திற்கு செல்கிறார். அந்தப் பயணத்தின் போதும் சுரங்கத்தில் அவர்கள் படும் கஷ்டத்தையும் பா ரஞ்சித் உணர்வு புர்வமாக கூறியிருக்கின்றார்.

இறுதியில் தங்கம் கிடைத்ததா என்பதே தங்களான் படத்தின் கதை.

பழங்குடி இனத்தவராக விக்ரம் முற்றிலுமாக தன் உருவத்தை மாற்றி இப்படி கூட ஒரு நடிகரால் இறங்கி நடிக்க முடியுமா என்று வியக்கும் அளவிற்கு தன்னை வருத்தி நடித்திருக்கிறார்.

காட்சிக்கு காட்சி தனது நடிப்பை மெருகேற்றி இருக்கிறார் சிவாஜி கணேசனுக்கு அடுத்து எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கொடுத்தாலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் விக்ரம்.

விக்ரமின் மனைவியாக பார்வதி எதார்த்தமாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு விக்ரமுடன் கழிசண்டை போட்டு இருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் பாடல்கள் கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்து இருக்கிறது. ஒளிப்பதிவு நம்மை ஆதிகாலத்துக்கே அழைத்து சென்று விட்டது.

ஒட்டுமொத்த படகுழுவும் தங்கள் உழைப்பை கொடுத்து தங்களான் படத்தை தந்த விதம் தங்கத்தை போல் ஜொலிப்பது நிச்சயம் .எல்லோரும் பார்க்கக்கூடிய படம்.


Watch – YouTube Click

What do you think?

நான்கு தேசிய விருதை பெற்ற பொன்னியின் செல்வன்… ஏழாவது முறையாக விருதை வென்ற ஏ.ஆர். ரகுமான்

நடிகர் தர்ஷன் விடுதலை…யாக யாகம் நடத்திய நடிகர் சங்கம்