தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே முட்டக்குடி அருள்மிகு வீரமா காளியம்மன் கோயில் பத்தாம் ஆண்டு ஆடி பெருவிழா பால்குட உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே முட்டக்குடி பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்ததாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் 10 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா கடந்த 2 ஆம் தேதி காளியம்மன் திரு நடனம் மற்றும் குத்துவிளக்கு பூஜையுடன் தொடங்கியது தொடர்ந்து வைபவத்தின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடந்தது.
முட்டக்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர் தொடர்ந்து வீரமாகாளி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் தொடர்ந்து கிராமத்தினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.