in

தஞ்சை கோட்டூர் – பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத ஐயனார் கோயில் – திருவீதியுலா

தஞ்சை கோட்டூர் – பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத ஐயனார் கோயில் – திருவீதியுலா

 

தஞ்சை மாவட்டம் கோட்டூர் அருள்மிகு பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத ஐயனார் கோயில் வைகாசி பெருவிழா செண்டை வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் இளைஞர்களின் கொண்டாட்டத்துடன் விடிய விடிய கோலாகலமாக திருவீதியுலா காட்சி.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் கிராமத்தில் எல்லை தெய்வமாக இருந்து விளங்கிவரும் அருள்மிகு பூர்ணா புஷ்கலாம்பிகை சமேத ஸ்ரீ ஐயனார் கோயில் வைகாசி பெருவிழா அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான திருவீதியுலா காட்சி வெகு விமர்சையாக நடந்தது.

மூலவரான பூர்ணா புஷ்கலாம்பிகை சமேத ஸ்ரீ ஐயனார் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்திலும் ஸ்ரீ ஐயனார் உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்துடன் கஜ வாகனத்தில் எழுந்தருள விசேஷ பூஜைகள் நடந்தது தொடர்ந்து விண்ணதிர செண்டை வாத்தியங்கள் இசைத்திட நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளோடு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே வண்ண ஆடைகளோடு அய்யனாரை தோளில் சுமந்துவர அருள்மிகு லாடப்பர் வேடமணிந்த பக்தர் காலில் சலங்கையோடு கையில் தீப்பந்தம் ஏற்றி சுவாமியை மூன்று முறை வலம் வந்து சாமி ஆடினார்.

மேலும் கோட்டூர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா காட்சி விடிய விடிய கோலாகலமாய் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களது இல்லங்களில் மாவிளக்கு பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

What do you think?

ஜெயம் ரவி.. யை விளாசி எடுத்து கடைசி வார்னிங் கொடுத்த கல்பாத்தி…

திண்டிவனம் தீவனூர் – ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் – சிம்ம வாகன காட்சி