in

தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை


Watch – YouTube Click

தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை

 

அறுவை சிகிச்சையின்றி மேற்கொள்ளப்பட்டது பிறவியிலேயே இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வெற்றிகரமான சிகிச்சை

தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வரும் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி இயக்குனருமான டாக்டர் பாலாஜிநாதன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வுக்கூடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 8500-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மாரடைப்பிற்கு உடனடியாக ( ஒரு மணி நேரத்திற்குள் ) செய்யும் சிகிச்சை 1402 மற்றும் 24 மணி நேரத்திற்குள் 2114 சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளன. இருதயத்துடிப்பு குறைவான நோயாளிக்கு 41 நிரந்தர இருதய துடிப்பு கருவி, 143 தற்காலிக இருதய துடிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் பிறவிலேயே இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இருதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் வைத்து இருதய குறைப்பாட்டை சரி செய்யும் முறையில் 3 குழந்தைகளுக்கு சிகிச்சை வெற்றிக்கரகமாக அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 2.50 லட்சம் வரை செலவாகும். கண் தானத்தை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநிலத் திட்ட மேலாளர் டாக்டர் மருது துரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, இருதயத்துறை பேராசிரியர் டாக்டர் ஜெய்சங்கர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலைவாணி மற்றும் பல்வேறு துறை டாக்டர்கள் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கடலூர் சில்வர் பீச்சில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்

வரும் 24ம் தேதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்: மாஜி அமைச்சர் முனுசாமி பேட்டி