தஞ்சை நடுக்காவேரி ஸ்ரீ லெக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில் ஸ்ரீ கோகுலாஷ்டமி உறியடி விழா
தஞ்சை நடுக்காவேரியில் அமைந்துள்ள ஸ்ரீ லெஷ்மி நாராயணப்பெருமாள் கோயில் மாலையில் பஜனை தொடர்ந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் விசேஷ அலங்காரத்துடன் திருவீதி உலா அதனைத் தொடர்ந்து இடையர் வேஷம் அங்கபிரதக்ஷ்ணம் உரியடித்தல் வழுக்கு மரம் ஏறுதல் என நடுக்காவேரி கிராம அக்ரஹார தெருவாசிகள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோவிலை சுற்றி அங்கபிரதக்ஷ்ணம் செய்தனர்.
இதில் உரியடித்தல் வழுக்கு மரம் ஏறுதல் என இந்த விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ லெஷ்மி நாராயணப் பெருமாள்க்கு தீபாராதனை காட்டப்பட்டது. தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்த கோகுலாஷ்டமி பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மஹாஜனங்கள் நடுக்காவேரி கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.