in

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டபோது பிடிபட்டார்

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டபோது பிடிபட்டார்

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமார் என்பவரும் வருகை தந்திருந்தார். அப்போது அவர் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை விற்பனை குறைந்துள்ளது சுட்டிக்காட்டியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுண்டர்கள் திறப்பது குறித்தும், விற்பனை அதிகரித்து பணம் வசூல் செய்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மண்டல மேலாளர் செந்தில்குமார் வழங்கினார்.

இந்நிலையில் இந்த கூட்டம் குறித்து ரகசிய தகவல் அடிப்படையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான குழுவினர் ரகசியமாக வருகை தந்து கண்காணித்தனர். அப்போது இதனை அறிந்த டாஸ்மாக் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

அப்போது மாவட்ட மேலாளர் செந்தில்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் திருவேங்கடம் என்பவருக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க முற்பட்டார்.

உடனடியாக அவரை வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பிடிபட்ட மாவட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையின் முடிவில் மாவட்ட மேலாளர் செந்தில்குமார், உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து கடலூர் கொண்டு சென்றனர்.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது

ஊசி போட்டதால் வாலிபர் இறந்ததாக புகார் போலி டாக்டர் கைது