in

வசூலை அள்ளும் சாவா திரைப்படத்திற்கு வரி விலக்கு

வசூலை அள்ளும் சாவா திரைப்படத்திற்கு வரி விலக்கு

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மயமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள( Chhaava ) ஜாவா திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் திரையிட வேண்டும் என்று சிவசேனா யுபிடி எம்பி பிரியங்கா சதுர்வேதி வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த படத்திற்கு “வரி விலக்கு” அளிக்க வேண்டும் என்றும் கோரினார் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் Chaava பெரும் சாதனை படைத்து 7 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ.225 கோடி ..யை குவித்துள்ளது.

உலகளவில் ரூ.300 கோடி ….யை வசூலித்திருக்கிறது.

சாவா திரைப்படத்திற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் கோவா அரசுகள் வரி விலக்கு அளித்துள்ளன.

சாவா திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் விக்கி கௌஷல், அக்ஷயா கன்னா, ரஷ்மிகா மந்தனா மற்றும் வினீத் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தை மேடாக் பிலிம்ஸ் சார்பில் தினேஷ் விஜன் தயாரித்திருகிறார் இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

What do you think?

பிரபல இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்கம்…. எந்திரன் கதை திருட்டு எதிரொலி

நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டலாலின் மனைவி சாமி தரிசனம்