அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அவசர கதியில் திணிப்பு ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அவசர கதியில் திணிப்பு. 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தரமான கல்வி கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்.
புதுச்சேரி கல்வித்துறையின் மூலம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இந்தாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பள்ளி நேரத்தையும் மாற்றி அமைத்தது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பள்ளிக் கல்வித் துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
அப்பொழுது புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையால் தற்போது வெளியிடப்பட்ட பள்ளிநேர பாட அட்டவணை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு திருத்தம் செய்ய வேண்டும், காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பாலகுமார் அவசரக் கதியில் புதுச்சேரியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அரசு கொண்டு வந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தரமான கல்வியை கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஏனென்றால் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாறி மாறி ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதினால் சரியான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க முடியாத ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தரமான கல்வியாக கொடுக்க அரசு நினைத்தால் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்….