in ,

இரட்டை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ஆராதனை

இரட்டை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ஆராதனை

 

காரியாபட்டி அருகே சூரனூரில் இரட்டை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ஆராதனை – திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சூரனூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள இரட்டை பைரவர்களான ஸ்ரீ ஆபத்தோத்தாரனர் (காசி பைரவர்) ஸ்ரீ காலபைரவர், கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு திருமஞ்சணம், பால், தேன், அரிசிமாவு, தயிர், சந்தனம், பன்னீர், உட்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை பைரவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்கள் வெள்ளை பூசணியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இதில் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்

அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஐய்ப்பசிமாத தேய்பிறை அஷ்டமி- வழிபாடு