in

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு தேய்பிறை அஷ்டமி நிகும்பலாயாகம்

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரியதச்சூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது..

யாக குண்டத்தில் மிளகாய், பழங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரித்தியங்கரா தேவிக்கு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்..

What do you think?

தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி

நுரையீரல் தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் நுரையீரல் சிறப்பு மருத்துவ முகாம்