in

தெலுங்கானா முதலில் கண்டெய்னர் பள்ளி இப்போது கண்டெய்னர் மருத்துவமனை

தெலுங்கானா முதலில் கண்டெய்னர் பள்ளி இப்போது கண்டெய்னர் மருத்துவமனை

 

தெலுங்கானா மாநிலம் முழுகு மாவட்டம் மலைவாழ் மக்கள் வசிக்கும் குக் கிராமங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். முழுகு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நக்சலைட் ஆன சீதாக்கா. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா தற்போது தெலுங்கானா மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.

தன்னுடைய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் சீதக்கா தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக அங்குள்ள பங்காருபள்ளி கிராமத்தில் 13 லட்சம் ரூபாய் செலவில் கண்டெய்னர் பள்ளிக்கூடம் ஒன்றை சீத்தக்கா ஏற்பாடு செய்தார். தற்போது அந்த பகுதியில் உள்ள தான்வாய் மண்டலத்தில் கண்டெய்னர் மருத்துவமனை ஒன்றையும் அரசு சார்பில் சீதாக்கா அமைத்து வருகிறார்.

அந்த மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட போக்குவரத்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களில் இது போன்ற கண்டெய்னர் பள்ளிகள், கண்டெய்னர் மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைக்க இருப்பதாக சீதக்கா தெரிவித்து இருக்கிறார்.

What do you think?

தஞ்சை பெரிய கோவிலில் துவங்கிய கிரிவலம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..

சேது எக்ஸ்பிரஸ் மூன்று பெட்டிகள் கழன்று நின்ற சம்பவம் – 30 நிமிடம் ரயில் தாமதம்