வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்
இந்திய சினிமாவில் தனது பங்களிப்புகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் தெலுகு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தனது வாழ்க்கைக்கு பங்களித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் 40 ஆண்டு காலமாக நடித்து கொண்டிருகிறார். இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்று இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி.
ரசிகர்கள் சிரஞ்சீவி hashtag…கை trend ஆக்கி வருகிறார்கள். இந்த விருது வியாழக்கிழமை இரவு லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் புகழ்பெற்ற ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் வழங்கப்பட்டது.
விழாவின் போது எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்து கொண்ட சிரஞ்சீவி பதிவிட்டதாவது, ” மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள், ஆகியோரால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் வழங்கப்பட்ட கௌரவத்திற்காக என் இதயம் நன்றியால் நிறைந்துள்ளது.
இந்தியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதால் மனமகிழ்ச்சி அடைகிறேன்” இந்த மரியாதை எனது பணியை மேலும் உற்சாகத்துடன் தொடர என்னைத் தூண்டுகிறது என்று போஸ்ட் செய்திருக்கிறார்.