மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் அதிகாலை முதலிலே நடைதிறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் நெய்வேத்தியம் தீபாரதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடு நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.