in

புதுச்சேரியில் மூன்றாவது நாளாக தொடரும் பதற்றம் மேலும் 4 பேருக்கு மூச்சுத் திணறல்


Watch – YouTube Click

புதுச்சேரியில் மூன்றாவது நாளாக தொடரும் பதற்றம் மேலும் 4 பேருக்கு மூச்சுத் திணறல்

 

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் கழிவறையில் இருந்து விஷ வாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட நான்காவது குறுக்குத் தெரு உட்பட ஆறு தெருக்களில் உள்ள வீடுகளில் கழிவறையை பயன்படுத்த நகராட்சி தடை விதித்து நடமாடும் கழிவறை அமைத்துள்ளன.

மேலும் பகுதியில் மக்கள் சமையல் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கழிவறைகளை சரி செய்யும் பணிகளை பொதுப்பணித்துறை துவக்கி உள்ளது.

குறிப்பாக நான்காவது குறுக்குத் தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் கழிவறையில் இருந்து தொட்டிக்கு செல்லும் பைப் லைன்களை புதிதாக மாற்றி தருவதுடன் சோக்பிட் மற்றும் எஸ் வடிவிலான பாதுகாப்பினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் முழு செலவிலேயே இந்த வீடுகளுக்கு மாற்றும் நடவடிக்கையை பொதுப்பணித்துறை எடுத்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்ட நான்காவது குறுக்கு தெருவில் இன்று அனைத்து பணிகளும் முடிவு பெற்று நாளை முதல் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தலாம் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

மேலும் அனைத்து வீடுகளிலும் உள்ள கழிவு நீர் வாய்க்கால் வழி உடைத்து எடுக்கப்படுகிறது. அனைத்து வீடுகளுக்கும் சோப் பீட் மற்றும் பாதுகாப்பான வகையில் கழிநீர் வெளியேறுவதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் இறங்கி உள்ளனர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கழிவறையில் இருந்து வாய்க்காலுக்கு செல்லும் வழிக்கு புதிதாக பை போடுவதற்கும் சிமெண்ட் தொட்டிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் ..

இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் விஷவாயு தாக்கிய பகுதியில் மேலும் 4 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் புஷ்பராணி (38) பூமகள்(52) சுலோச்னா(60 )மாரி செல்வம்(69) ஆகியோருக்கு மூச்சு திணறல் இருப்பதால் முகாமில் சோதனையிட்ட மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 17-ம் தேதி வரை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் ரூ 20 ஆயிரம் லஞ்சம்