in

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்

நான்கு கைதிகள் மீது வழக்கு பதிவு செய்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகளும் விசாரணை கைதிகளும் என ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

சமுதாய ரீதியாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுவதும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கைதி காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி பழனி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார். இந்த நிலையில் நேற்று உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் போது கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்ற கைதிக்கும் சக கைதியான முக்கூடல் அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், ராஜகோபால் தூத்துக்குடி சேர்ந்த விக்னேஷ் என்ற கைதிகளுக்கு இடையே உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது யார் முதலில் வாங்குவது என்ற அடிப்படையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் சிறை வார்டன் உடனடியாக உணவருந்தும் கூடத்திற்கு சென்று கைதிகளை விலக்கி விட்டு சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. நெல்லை பாளையங்கோட்டை சிறைத்துறை கண்காணிப்பாளர் முனியாண்டி உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்ததாகவும் அந்த அடிப்படையில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கைதிகள் பேரின்பராஜ், மணிகண்டன் ,சந்தோஷ் மற்றும் ராஜகோபால் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கைதிகளுக்குள் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை வழங்கிய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை

10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி பில் கலெக்டர்