in

திருச்சிராப்பள்ளி தென்னூர் ஆழ்வார் தோப்பில் இரண்டு பேக்கரிகளில் சோதனை

பொது மக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் ஆழ்வார் தோப்பில் இரண்டு பேக்கரிகளில் சோதனை செய்தனர்.

சோதனையின் போது நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து கேக் மற்றும் பிரட்டுகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. ஸ்டார் பேக்கரி உரிமையாளர் அசாருதீன்,ஆழ்வார் தோப்பு மற்றும் ஸ்ரீ ஆண்டவர் பேக்கரி உரிமையாளர் கருணாகரன் ஆகியோரின் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களிலும் சுமார் 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

அழுகிய முட்டைகள் கொண்டு தயார் செய்த 215 கிலோ பேக்கரி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டு இரண்டு பேக்கரி தயாரிப்பு நிறுவனமும் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்திவைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.

இரண்டு பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 58ன் படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அலுவலர் ரமேஷ்பாபு பேசிய போது…. இது போன்ற அழுகிய முட்டைகளையோ, காலாவதியான பொருட்களையோ கொண்டு உணவு பொருட்கள் கொண்டு தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

What do you think?

தீபாவளி பண்டிகைக்கு அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் வழங்ககோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரியும் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் நகைச்சுவையாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரால் கூட்டத்தில் சிரிப்பலைகள்