நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தை அமாவாசை பத்ர தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தீப ஒளியில் கோயில் வளாகம் முழுவதும் ஜொலித்தது. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தாிசனம் செய்தனர்
தென் மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சிறப்புகள் வாய்ந்த அருள்மிகு காந்திமதி உடனுறை நெல்லையப்பா் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை அம்மாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரதீபத் திருவிழா நடைபெறும்.
இந்தாண்டு பத்ர தீப திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகின்றது. பத்ர தீபத்துக்கு முந்தைய தினம் தங்க தீபம் ஏற்றப்படுவது சிறப்பு வாய்த்ததாகும் அதன்படி நேற்று இரவு சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து தை அம்மாவாசை மாலை திருக்கோவில் சாயசரட்சை பூஜை முடிந்ததும் மணி மண்டபத்தில் ஏற்றப்பட்ட தங்க விளக்கிற்கு அா்ச்சனை, ஆரத்தி நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் தங்க விளக்கினை ஊர்வலமாக நெல்லையப்பர் மூலஸ்தானத்திற்கு எடுத்துச் சென்றனர் அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு அதிலிருந்து தீபம் திரு விளக்கின் மூலம் கொண்டுவரப்பட்டு சுவாமி கோவில் தங்க கொடிமரம் முன்பு அமைந்துள்ளவிளக்கில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் சுவாமி கோயில், ஸ்ரீகாந்திமதி அம்பாள் கோயில் ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில்களில் அமைந்துள்ள உள்சன்னதி மற்றும் வெளிப் பிரகாரங்கள் என திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அகல் விளக்குகளை வரிசையாகவும், பல வடிவங்களிலும் ஏற்றி வைத்தனர்.
இதனால் திருக்கோயில் வளாகமே தீபஒளியில் ஜொலித்தது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இத்திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து பத்ர தீபத்தை ஆட்சியர் ஏற்றினார் தொடர்ந்து இரவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும் 63 நாயன்மார்கள் மரகேடயத்திலும் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாத்தினா் செய்திருந்தனா்.