ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு
செஞ்சி மாநகரின் ஈசானிய மூலையில் சிறு கடம்பூர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ விழாவில் சிறப்பு வழிபாடு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ திருநாளில் உலக அமைதி வேண்டியும், இந்த திருக்கோவில் புனரமைக்கப்பட்டு புனித நீராட்டு விழா நடைபெற வேண்டியும், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செஞ்சி சிறுகடம்பூர் ஈசான மூலையில் எழுந்தருளியுருக்கும் சுமார் 1200 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் உலக அமைதிக்காகவும், உலக மக்கள் அனைவரும் மனநிறைவோடு நிம்மதியாக வாழவும், ஆலயம் புனரமைக்கப்பட்டு புனித நீராட்டு விழா நடைபெற வேண்டியும், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷ திருநாளில் காசி ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீவிஸ்வநாதர்,விசாலாட்சி அம்பாள் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்று,
பல்வேறு மலர்களால் அலங்கரிப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிவபுராணம் உள்ளிட்ட சிவன் துதி பாடல்களை பாடினர்.
தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் உற்சவர் பிரதோஷ நாயகருக்கும் பிரதோஷ நாயகிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் மற்றும் பொன் ஆபரண நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் திருக்கோவிலின் பள்ளி அறையில் பிரதோஷ நாயகருக்கும்,நாயகிக்கும் பொன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பொன்னூஞ்சல் தாலாட்டு பாடல் பாடி பூஜைகள் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.